பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 79 புதிய உரை: ஆர்வமான கருணையும், கருணை நிகழ்த்தும் நற்செயலும் ஆகிய இரண்டுமே அறனின் செயல் நன்மைக்கு ஒர் அர்த்தமாகிறது. விளக்கம்: அன்பு ஆர்வத்தால் எழுவது. அறம் கருணையால் விளைவது. இந்த இரு பண்புகளும் ஒருவரிடம் பாடறிந்து வழங்கப்படுகிற போது, அதுவே உயர்ந்த வாழ்வின் உதாரணமாகி விடுகிறது. அதுவே இல் வாழ்க்கையின் இலட்சியத்திற்கு ஒர் அர்த்தமாக விளங்குகிறது. 46. அறந்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன் பொருள் விளக்கம்: அறத்து ஆற்றின் = வருபவர்களது மனத்தைக் குளிரச் செய்தும் புறத்து ஆற்றின் = வருபவரது துயர்களை உடலால் தீர்த்தும் இல்வாழ்க்கை = குடும்ப வாழ்க்கையை ஆற்றின் = நடத்தி வருகிறபோது போஒய் = தவறுதலாக வேறு எதுவும் பெறுவது எவன் = கிடைப்பது எப்படி? சொல் விளக்கம்: - ஆற்றுதல் = துயர் தீர்த்தல், குளிரச் செய்தல் புறம் - உடம்பு; ஒய் = தவறுதல்; பெறுவது = கிடைப்பது முற்கால உரை: ஒருவன் இல் வாழ்க்கையைத் தரும வழியாக நடத்து வானாகில், துறவறத்திற்போய் பெறும் பயன் என்ன என்பதாம். என்பதாம். தற்கால உரை: ஒருவன்தன் இல்வாழ்வை அறவழியில் நடத்து வானேயானால், அந்த இல்வாழ்வு அல்லாத பிற வழிகளில் போய் அவன் அடையத் தக்கது உண்டோ? (எதுவுமில்லை)

புதிய உரை: வருவோர் மனங் குளிர, உடலால் துயர்தீர்த்துக், குடும்ப வாழ்வை நடத்தும்போது தவறுகள் எதுவும் நடவா.