பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. இல்வாழ்க்கை 41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை பொருள் விளக்கம்: இயல்புடைய - ஒழுக்கமும் நற்குணமும் பலமும் தரக்கூடிய மூவர்க்கும் = உடல், மனம், ஆத்மா (உயிர்) ஆகிய மூன்றுக்கும். நல்லாற்றின் நல்ல வழிகளில் நின்ற துணை நிலை பெற்ற துணையாக்கி இல்வாழ்வான் = வீட்டில் வாழ்கிற அறன் ஆனவன் என்பான் = (எண்ணி) நிலைபெற வாழ்கிறான் சொல் விளக்கம்: த்மா;

  • f

இயல்பு = ஒழுக்கம் நற்பண்பு; மூவர்: உடல், மனம், ஆ இயல்பு = ஒழுக்கம், பலம், நற்குணம். முற்கால உரை:

  1. ,ירי sh H i — *† - 2- is * of ! -- . !. பிரமச்சாரி, வானப்ரஸ்தன், சந்நியாசி இம் முவர்க்கும்

இல்லறத்தில் வாழ்வான் துணையாவான். தற்கால உரை: பெற்றோர்கள், மனைவி, பெற்றெடுத்த மக்கள் இம் மூவருக்கும் இல்லறத்தில் வாழ்வான் துணையாயிருப்பான். புதிய உரை: உடல், மனம், ஆத்மா (உயிர்) இம் மூன்றையும் நல்லொழுக்கால் காத்துச் செயல்படும்போதுதான் அறன் இல்வாழ்வான் என்ற சிறப்பைப் பெறுகிறான். விளக்கம்: இல்வாழ்வான் என்கிற மனிதன், அறனாக ஆக வேண்டும். நலத்தோடும் வளத்தோடும் பலத் தோடும் இருந்தால்தான் வாழ்கிறவன் என்று அர்த்தம். நலிவுற்று, பொலிவற்று நோய் பெற்று வாழ்கிறவன் வாழ்கிறவன் அல்லன். வதிகிறவன், அழிகிறவன். அதனால் தான் வாழ்வான் என்றார். அதாவது முக்காலத்திலும் வாழ்வான் என்றார். அப்படிப்பட்ட வாழ்வுக்கு அடித்தளமாக இருப்பது அவனது உடல் மனம், ஆத்மா இம்மூன்றும் ஒழுக்கத்தில் ஒழுகி வந்தால்.