பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் பொருள் விளக்கம்: செயற்கு அரிய = புலன்களை அடக்குகின்ற ஆற்றலால் கிடைக்கிற அரிய அற்புதங்களை செய்வார் = எல்லாம் செய்து மக்களுக்குப்பயன் அளிப்பவர். பெரியர் = எல்லோர்க்கும் பேராளாகிறார். செயற்கரிய = அரியதான புலனடக்கம் என்பதை செய்கலாதார் = அடக்க முடியாமல், முயலாமல் அதில் வீழ்ந்து அழிப்பவர், அழிபவர். சிறியவர் = மிகவும் கீழ்த்தரமானவராகி விடுகிறார். சொல் விளக்கம்: - செயற்கரிய = புலன்களை அடக்குகிற பெரியர் = எல்லோர்க்கும் பேராளர் முற்கால உரை: ஒத்தபிறப்பினராகிய மக்களுள், செய்தற்கு எளியவற்றைச் செய்யாது, அரியவற்றைச் செய்வார் பெரியர். அவ்வெளியவற்றைச் செய்து, அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர். தற்கால உரை: பிறரால் செய்வதற்குரிய நல்ல செயல்களைச் செய்பவரே பெரியவர். அவ்வாறு செய்தற்கரிய செயல்களைச் செய்யாதவர் சிறியவர். புதிய உரை: புலன்களை அடக்குகின்ற ஆற்றலால் கிடைக்கும் அற்புதங்களைச் செய்து பலனளிப்பவர், எல்லோர்க்கும் பேராளர். புலனடக்கம் இல்லாதவர் கீழ்த்தரமானவர். விளக்கம்: உடலின் சிறப்புப் புலன்கள் கட்டுப்பாட்டின் காரணமாக ஒரு வழிப்படுத்தும்போது உண்டாகிற உடலின் சக்தி, உலகத்தையே பிரமிக்க வைக்கின்ற பெருமை தர வல்லதாகும். அதுவே, எண்வகை சித்திகள் என்று போற்றப்படுகின்றது. சத்துகளையும் சித்துகளையும், சித்திகளையும் கொண்டு, மனித குலம் காப்பவர்கள் மாமனிதர்கள். புலன்களால் சிதைந்து புதைந்து போனவர்கள், புன்மையராகப் பூமியின் புண்களாக ஆகி விடுகின்றனர்.