பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 91 = முற்கால உரை: பிற தெய்வத்தை வணங்காது கணவனைத் தொழுதெழுபவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும். தற்கால உரை: கணவனுக்கேற்ற இல் வாழ்க்கைத் துணைவியாக இருந்து அவன் எதிர்பார்ப்புக்கு ஒத்த படி நடப்பவளே சிறந்த மனைவியாவாள். புதிய உரை: தன் உடலாகிய தெய்வத்தைத் தொழுகிற கூர்மையான அறிவுடன், தன் கணவன் மேற்கொள்கிற முயற்சியை மேம்படுத்த உதவுபவள் - பேரின்பமானது வேண்டும் என்று சொல்கிறபோதே மிகுதியாகப் பெற்று மகிழ்விக்க இல்லறம் இன்பமயமாகும். விளக்கம்: தேகம் என்பதே தெய்வம் குடியிருக்கும் சுகம் என்றே குறிக்கிறது. தன் உடலுக்குள் வாழ்கிற சக்தியாகிய தெய்வத்தை வணங்கி, வளர்த்துவரும் நுண்மையான ஞானம் கொண்டவளாக விளங்குகிறாள். கணவனது முயற்சியை மென்மேலும் வலுப்படுத்தி, இல்வாழ்வை மேம்படச் செய்பவள் முன், (அமுதம்) அகத்திலும் புறத்திலும் உவகை, மழைபோல பெய்து மகிழ்விக்கும். இல்லத்திற்கு வேண்டுவது உவகைதானே! வான் மழைபோல, வற்றாத இன்பம் வீட்டில் வாழ் விக்கும் பெருமை அந்தப் பெண்ணின் மதிநுட்பத்தால்தான் விளைகிறது. 54 வது குறளில், உடல் திண்மையால் (கற்பால்) பெறும் பேறு பிறக்கிறது என்றார். 55வது குறளில் திண்மையான தேகத்தில் தோன்றுகிற கூர்மை அறிவால், பேரின்பம் பிறக்கிறது என்று பாடுகிறார் வள்ளுவர். 56. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் பொருள் விளக்கம்: தற்காத்து = தன்னை உடல் திண்மையாலும் மன நுண்மையாலும் வளர்த்துக் காத்து தற்கொண்டான் பேணி - தனக்கு உரியவனான அறனையும் உடல் வலிமையாலும் மனவலிமையாலும் வாழும் முறைகளில் காத்து தகை சான்ற - அருள், அன்பு, மேன்மையைக் காக்கும்