பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா கெடுக்கும் காரியங்களால் இன்பம் கிடைப்பது போல் தோன்றும். அது விரைவில் அழிவதோடு உடலையும் அழித்து விடும். மனமும் பிறகு பழித்து விடும். இந்தக் குறளில் அறன் பெற வேண்டிய இன்பம் நல்வினைகளால்தான், தீவினைகளால் அல்ல. தீயவை மயக்கும். மருட்டும். மயக்கத்தையே மகிழ்ச்சி என்றும், புகழ்ச்சி என்றும் சூடேற்றும். ஆனால் அந்தச் சூடே அந்த மனிதனைச் சுவடு தெரியாமல் அழித்து விடும் என்கிறார் வள்ளுவர். 40. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி பொருள் விளக்கம்: ஒருவற்கு = உலகில் வாழும் ஒரு மனிதர்க்கு செயல் = ஒழுக்கமான காரியங்களில் பாலது பற்று வைத்து ஒரும் = ஆராய்ந்தறிந்து தெளிந்து நடக்கும்போது அறனே = அறத்தில் சிறந்தவர் என்று (அறன்) புகழ் பெறுவர். உயர் = உயிர் வாழ்வதற்காக மற்ற துன்பங்களிலிருந்து தப்பிக்க பாலது = ஆசைப்படுகிற ஒரும் = (தீயதான) அறிவைச் சிந்தித்தால் பழி = வாழ்வில் குற்றமும் இகழ்ச்சியும் பொல்லாங்கும் நேர்ந்து விடும். சொல் விளக்கம்: - உயல் = உயிர் வாழ்தல்; உய்தல் - தப்பித்தல் ஒர்தல் = ஆராய்ந்தறிதல் தெளிதல் செயல் - ஒழுக்கம் காரியம் பாலது பற்று, பழி குற்றம், பொல்லாங்கு இகழ்ச்சி. முற்கால உரை: ஒருவற்குச் செய்தற் பான்மையது நல் வினையே ஒழிதறி பான்மையது தீவினையே. - தற்கால உரை: ஒருவன் செய்யத்தக்கவை அறச் செயல்களே. அவ்வாறே அவன் செய்யாமல் விடத்தக்கவை பழிச்செயல்களே.