பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவன் வாழ்கிறவன். இல்லையேல் அவன் உயிர் இருந்தும் தாழ்கிறான்; வீழ்கிறான். இந்த மூன்றும் நல்ல வ ழிகளில் செலுத்தும் துணையாக இருக்கும்போது தான் இல்வாழ்வான் என்பவன் எல்லோருக்கும். தெரிகிறான். இனிது செயல்படும் இந்த மூவர்க்கும் அறன் நல்ல துணையாகிறான். அறனுக்கு அந்த மூன்றும் அரிய துணையாகிறது என்பது வள்ளுவர் கருத்து. மூவர் என்ற பெருமை கருதி மூன்று என்பதை முதல் குறளில் அறன் வளத்தோடு இருக்க வேண்டிய முறை காட்டப்பட்டது. மூவர்க்கும் எனும் இடத்தில் தான் உரையாசிரியர்கள் வேறுபடுகின்றார்கள். 42. துறந்தார்க்கும் துவ்வா. தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை பொருள் விளக்கம்: துறந்தார்க்கும் = உலக வாழ் வைத் துறந்து உலகுக்கு வழிகாட்டுவார்க்கும் துவ வாதவர்க்கும் = உலகில் இருந்தும் ஐம் புல நுகர்ச்சியில் வலிவற்று பலமிழந்தார்க்கும் இறந்தார்க்கும் = வாழ்வில் இனி தேற முடியாது என்னும் அளவில் வீழ்ச்சி அடைந்தவர்க்கும். இல்வாழ்வான் என்பான் = வீட்டிலே வளமுடன் வாழ்கிற அறன் துணை = உற்ற துணையாக இருந்து காக்கிறான். சொல் விளக்கம்: துவ்வ ஐம்பொறியால் நுகர, அனுபவிக்க இறந்தவர் = அழிந்தவர், வாழ்க்கையில் வீழ்ந்தவர். முற்கால உரை: ஆதாரமானவராலே விடப்பட்டோர்க்கும். வறுமை ப் o- + + + av fr r" m r - -- Q ❍ --, #. 2– * .." Q * .ெ H - பட்டவர்க்கும், இறந்தவர்க்குப் பிதிருக்கடன் முதலியன செய்து நற்கதி அடைவித்தலாலும் இல் வாழ்வான் துணையென்றார். தற்கால உரை: துறவியர்க்கும் வறியவருக்கும் முதியோருக்கும் இல்வாழ்வை நடத்துகிறவன் துணையாவான்.