பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 3-13 மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. அதனால் ஆனந்தப்படுகிற ஆன்மாவின் சக்தி அதிகமாகிறது. வலிம்ை பெறுகிறது. வாழ்வை மேம்படுத்துகிறது. அது வல்லது என்று நான் பொருள் கொண்டிருக்கிறேன். புகழுக்குரியது புரத்தல், பேணிக்காத்தல், பொருந்தப் பழகுதல். இப் படிப்பட்ட இனிய செயல்கள் தாம், ஆன்மாவை இதப்படுத்தி, வலிமைப்படுத்துகிறது. இல்லை என்ற சொல்லுக்கு இன்மை, எதிர்மறை என்னும் பொருள்கள் இருப்பது போல, இம்மை என்ற பொருளுக்கும் இருக்கிறது. இம்மை என்கிறபோது, இப் பிறப்பு, இந்த உலகம், இகபோகம் என்றும் பொருள்கள் கிடைக்கின்றன. இம்மெய் என்றும் நாம் பொருள் கொள்ளலாம். இம்மெய்யில் உள்ள ஆன்மாவுக்கு என்ன பயன் ஈவதால், இணைந்து போவதால் என்றால், மெய்யில் உலா வருகிற உயிரானது, அதாவது பிராணவாயுவானது பேரளவில் பெற இந்த ஈயும் இன்பம் உதவுகிறது என்பதால்தான், அது வல்லது என்றார். மெய் வல்லதாகிறது, மனம் வல்லதாகிறது, ஆத்மாவாக விளங்கிச், சீவனாக சிலிர்ப்புற்று, உயிர்க்காற்றாக உடலுக்குள் நிறைவது தான் ஊதியம். அந்த அற்புதமான ஊதியத்தை அடைவது தான் மனிதத்தின் பெரும்பேறு என்னும் பேருண்மையை வள்ளுவர் முதல் குறளில் முத்தாய்ப்பாகத் தொடங்கியிருக்கிறார். 232. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ் பொருள் விளக்கம்: இரப்பார்க்கு = இரந்து நிற்பாருக்கு ஒன்று = ஒருமுகப்பட்டு, ஒப்பற்ற பொருளை ஈவார்மேல் = கொடுக்கின்றவரின் உடம்பில் நிற்கும் புகழ் எல்லாம் = நிலைத்து நிற்கும் அருஞ்செயல் எல்லாம் உரைப்பார் = புகழை முழக்கமிடுகிற உரைப்பவை - விரித்துரைக்கும் மெய்யுரையாய் ஆகிறது