பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏭᎼ8 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 240. வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர். பொருள் விளக்கம்: வசைஒழிய நிணம் ஒழித்து, கட்டுடல் வளர்த்து வாழ்வாரே - தினம் காத்து வாழ்பவரே வாழ்வார் = (சிறந்த பயனுள்ள வாழ்க்கையை) வாழ்கிறார் இசையொழிய = அருஞ்செயலும் புகழும் இல்லாமல். வாழ்வாரே = வாழ்பவரே வாழா = வாழத்தெரியாத தவர் - மூடர் ஆவார். சொல் விளக்கம்: வசை = நிணம், மாமிசம்; இசை - அருஞ்செயல் புகழ் தவர் - தமர், மூடர், தவறு. முற்கால உரை: தம் மாட்டு வசை உண்டாகாமல், வாழ்வாரே உயிர் வாழ்வாராவார். புகழுண்டாமல் வாழ்வாரே இறந்தவராவார். தற்கால உரை: பழி நீங்க வாழும் வாழ்வினரே நல் வாழ்வினர். புகழ் நீங்க வாழும் வாழ்வினர், நல்வாழ்வு வாழாதவர். புதிய உரை: ஊளைச் சதையை ஒழித்து, கட்டுடல் வளர்த்து வாழ்பவரே, பயனுள்ள வாழ்க்கையை வாழ்கிறார். புகழும் அருஞ்செயலும் ஆற்ற இயலாதவர், அறிவிருந்தும் மூடராக அழிகிறார். விளக்கம்: உடலில் உள்ள தசைக்கும், சதைக்கும் நிறைய வேறுபாடுண்டு. உறுதியானது; உழைப்புக்குத் தகுதியானது. இயக்கத்திற்கு எளிதானது. ஆற்றல் மிகு செயலுக்கு உறுதுணை பயப்பது. அடிப்படை தசைகள். சதை என்பது 'தளதள, தொள தொள வென்று உருவாகியிருப்பது. உடல் அமைப்பைக் கெடுப்பது. உழைக்க மறுப்பது. செயலில் சுறுசுறுப்பை வெறுப்பது பூமிக்குப் பாரமாக உடலை நடமாட வைப்பது.