பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 341 சொல் விளக்கம்: பற்றி - காரணம், பற்று, உலக ஆசைகள் விடாஅ = உள்ளும் புறமும் விடாத தவர்க்கு = தீச்செயல் ஆற்றுவோருக்கு முற்கால உரை: இருவகைப் பற்றினையும், இறுகப் பற்றி விடாதாரை பிறவித் துன்பகள் இறுகப் பற்றி விடா. தற்கால உரை: அகப் பற்று, புறப்பற்று ஆகிய இருவகைப் பற்றுக்களையும் இறுகப் பற்றிக் கொண்டு, அவற்றை விடாதவரைத் துன்பங்கள் இறுகப் பற்றிக் கொண்டு, அவர்களை விடமாட்டா. புதிய உரை: உலக ஆசைகளைப் பற்றிக் கொண்டு தீச்செயல்கள் புரியும் துன்மார்க்கர்க்கு, அவர் கொண்ட பற்றின் காரணமாகத் துன்பமும், ஆபத்தும் தொடர்ந்து, அகமும், புறமும் விடாது அவரைத் தாக்கி அழித்து விடும். விளக்கம்: 'அ' என்ற சொல்லுக்கு அகச் சுட்டு, புறச் சுட்டு என்று பெயர். அகத்தின் சுகத்தை அழித்து, புறத்தின் முகத்தைக் கெடுத்து, ஜெகத்தின் வாழ்வினை அழித்து, பற்றுக்கள் எல்லாம் தீயாகப் பற்றிக் கொள்ளும். நொடிக்கு நொடி அவருக்குள்ளே அதுமுழுதாக முட்டிக் கொள்ளும். வறுமை வரும். பயம் ஏற்படும். நோய்கள் உண்டாகும். ஆபத்து அடிக்கடி நிகழும். வேதனைகள் வந்து அவர்களுக்குள்ளே தொற்றிக் கொள்ளும். ஆக, தான் பட்ட இடத்தை, தொட்ட இடத்தை எரித்து தானும் எரிந்து அடங்குகின்ற தீயசெயல்கள், தீமையாளரை விடாது விரட்டிப் பிடித்துக் கொல்லும் என்று ஏழாவது குறளில் வள்ளுவர் குறிக்கிறார். 348. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைபபடடாா மறறை யவா பொருள் விளக்கம்: தலைப்பட்டார் = தீமைகளை எதிர்த்தவர் தீர = முற்றும் தீர்மானமாக துறந்தார் = தீமைகளை விலக்கிவிடுவார்