பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 135 - - *= 92. அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் பொருள் விளக்கம்: அகன் அமர்ந்து = மனத்தால் விரும்பி (எதிரில் உள்ளவரை) நன்றே முகனமர்ந்து = நன்றாக முகத்தால் பொருந்தி (முகமலர்ச்சியடைந்து) * ஆகப்பெறின் = முழுவதுமாக அந்தப் பேற்றைப் பெறுகிறபோது (தருகிறபோது) இன்ஈதல் = இனிமை படைக்கின்ற சொற்களைப் பேசும்போது இன்சொலன்-இன்பம் தரும் சொற்களைச் சொல்கிற வனாகிறன். சொல் விளக்கம்: அமர்ந்து = விரும்பி, பொருந்தி; இன் = இனிய ஈதல் = படைத்தல், கொடுத்தல்; ஆக = முழுவதும் முற்கால உரை: - முகனமர்ந்து இனிய சொற்களைச் சொல்லுவானாகில் அகனமர்ந்து கொடுத்தலினும் நல்லது. தற்கால உரை: கொடையைப் பெறுவதைக் காட்டிலும் இன்சொல்லைக் கேட்பதே ஒருவனுக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கும். புதிய உரை: தொடர்பில்லாத புதியவரை மனத்தால் விரும்பி, நன்கு முகத்திலே அன்புபொருந்தி, முழுவதுமாக மாறுகிறபோதே இனியசொற்களைப் படைத்துச் சொல்கின்ற இன்சொலன் ஆகிறான். விளக்கம்: இனிய சொற்களைப் பேச, முதலில் மனத்தால் ஒன்றிப் போக வேண்டும். அகத்தை முகந்து காட்டுகிற முகம் தெளிந்து, பொருந்துகின்ற குணத்தைப் பெறும். அதன் மூலமாகப் பேசுகிற சொல்லிலும் பண்பான பரிவான இன்சொல் பிறக்கும். இன்சொலன் ஆவதற்கு மனமும் முகமும் உடலும் முழுதும் பொருந்த வேண்டும் என்று இன்சொல் பிறக்கும் இடங்களை இரண்டாவது குறளில் வள்ளுவர் காட்டுகிறார்.