பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா விளக்கம்: ஒருவன் மற்றவனுக்கு எப்பொழுது பகைவனாகிறான்? வேண்டாதவனாகிறான்? வெறுக்கத் தகுந்த காரியங்களைச் செய்கிறான்? அவனுடைய மனதில் ஏதோ ஒன்றுக்காக, மனக்குறைபட்டுப் போகும்போது, எண்ணங்களில் கறைபட்டுப் போகும்போது, அகமானது அழுக்காகும்போது, ஆசைகள் நிறைவேறாமல் வெறுப்பு அடையும்போது, இவற்றை எல்லாம் ஒருசேரக் குறிப்பதற்காகவே 'கறுத்து' என்ற வார்த்தையைப் பெய்திருக்கிறார். ஆற்றுக்கு ஊற்றுக்கண் தேவைப் படுகிறது. பால் கறக்க முலைக்கண் தேவைப்படுகிறது. காட்சிகளைப் பார்க்க முகக்கண் தேவைப்படுகிறது. இங்கே பகை கொண்ட மனதில் பாழாக்குகின்ற காரியத்தை உடன்பட்டுச் செய்கிற உடம்பைக் குறிக்க கண் என்கிறார். ஏன் உடம்பைக் கண் என்றார் என்றால், அதற்கு அகக் கண்ணும், புறக் கண்ணும் உண்டு என்பதால். அந்த உடற் கண்ணை ஊனக்கண்ணாக மாற்றாமல், ஞானக்கண்ணாக மாற்றுகிற வல்லமை படைத்தவர்களைத்தான், மாசற்றார் என்ற சொற்களை அடுத்தடுத்து இரண்டு குறள்களிலும் வடித்து வைத்து இருக்கிறார். 313. செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமம் தரும் பொருள் விளக்கம்: செய்யாமல் = நேர்மை நெறிபார்க்காமல் செற்றார்க்கும் - கொலை வெறி பிடித்தலைகிற பகைவரையும் இன்னாத - துன்பம் இழைக்காமல் செய்த - அரியசெயல்செய்தார்க்கு பின் - எதிர்கால வாழ்வை உய்யா - ஈடேற்றுகின்ற விழுமம் தரும் = சிறப்பு, நன்மைகளைத் தரும் சொல் விளக்கம்: செய்யாமல் = நேர்மையின்றி செற்றார் - கொலை வெறி பிடித்தவர்; உய்ய ஈடேற்றுதல் விழுமம் = சிறப்பு, நன்மை; பின், எதிர்காலம் இன்னாத துன்பம் இழைத்தல்