பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க் ள் ய உரை திருக்குறள் புதி 567 தவாவினை = மலையைப் பெயர்க்கும் காரியமாகும் ஆற்றான் = அந்த நினைவுபெற்ற வலிமையில்லாதவன் தான் = ஆன்மாவானது வேண்டும் = விரும்புவதுபோல வரும் = எல்லாப் பயன்களும் வந்து சேரும் சொல் விளக்கம்: தவாவினை = மலை, உறுதியான செயல் தான்வேண்டும் = ஆன்மாவிரும்புகிற ஆற்றான் = வலிமையில்லாதவன் முற்கால உரை: ஒருவன் அவாவினை அஞ்சி துவரக்கெடுக்க வல்லனாயின் அவனுக்குக் கெடாமைக்கு ஏதுவாகிய வினைதான் விரும் பு நெறியானே உண்டாகும். தற்கால உரை: ஒருவன் அவாவினை முற்றிலும் நசுக்கக் கூடியவனாக இருந்தால் அது கெடாமைக்கு ஏதுவான நற்செயல். அவன் விரும்புகிற வழியில் ஆராயப்படும். புதிய உரை: அவாவினை எழவிடாமல் அடக்கி அழிப்பவனது உறுதியான செயல் மலையைத் தகர்ப்பதுபோலாகும். அந்த நினைவின் எழுச்சிபெற்ற வலிமையில்லாத ஒருவனுக்கு, அவனது ஆன்மா விரும்புகிறபடியே எல்லா வெற்றிகளும் உண்டாகும். விளக்கம்: அறிய செயலை ஆற்ற விரும்புவதை உதாரணமாக மலையைத் தகர்ப்பது என்பார்கள். அவாவினை அடக்குதல் என்பது வேறு. அடக்கி நிறுத்துதல் என்பது வேறு. அதனை அழித்து இல்லாமல் ஆக்குதல் என்பது வேறு. அழிக்கும் ஆற்றலைத்தான் மலையொத்த செயல் என்கிறார். உடல் வலிமையற்ற ஒருவன் மனதால் அவாவினை அடக்க விரும்பினால் அதற்கு அவனது உடல் மட்டுமல்ல, அவனது ஆன்மாவும் உதவும். உயிர்ப்பினைத் தரும். அதைத்தான் ஆன்றோர்கள் ஆன்மபலம், ஆன்ம சக்தி என்கிறார்கள். ஆன்ம பலத்தால் மலையையே அசைக்க முடியும். இந்த அவாவினால் என்ன செய்ய இயலும் என்று வள்ளுவர் இந்த ஏழாவது குறளின் ஆன்மாவின் அபூர்வ சக்தியை வெளிப்படுத்தி விழிப்புணர்வை ஊட்டுகின்றார்.