பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 56 | குட்டியாய் இருக்கும் பொழுது அழகாகத் தோன்றுவது போல, விஷ ஜந்துக்களின் குஞ்சுகள் கவர்ச்சியாகத் தெரிவதுபோல, தீமையின் தொடக்கமும், தேவதைபோல வந்து திருப்தியான காட்சியைத் தந்து விடும் என்று முதல் கு றளி ல் வள்ளுவர் அவாவின் அமைப்பை, நமக்குப் புரிய வைக்கிறார். 362. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றஅது வேண்டாமை வேண்ட வரும் பொருள் விளக்கம்: வேண்டுங்கால் = விரும்புகிற பொழுது பிறவாமை = பிற அழகான எண்ணங்களையே வேண்டும் = விரும்ப வேண்டும் மற்றஅது - அப்படியில்லாவிட்டால் வேண்டாமை = நாம் விரும்பாமல் வெறுக்கிற தீயவைகள் வேண்டவரும் - மன்றாடி வந்து நம்மைப் பிடித்துக் கொள்ளும் சொல் விளக்கம்: வாமம் - அழகு; வேண்டாமை = வெறுப்பு வேண்ட மன்றாடி முற்கால உரை: பிறப்பு துன்பமாதல் அறிந்தவன் ஒன்றை வேண்டின் பிறவாமையை வேண்டும். அப்பிறவாமைதான் ஒரு பொருளையும் அவாவாமையை வேண்ட அவனுக்குத்தானே உண்டாகும். தற்கால உரை: ஒருவன் ஒன்றை வேண்டும் போது துன்பமில்லாத நிலைமையையே வேண்டுவான். அத்துன்பமில்லாத நிலைமையும் அவன் அவாவின்மையை விரும்புவதன் மூலந்தான் வரும். புதிய உரை: விரும்புகிற பொழுதே அழகான எண்ண ங் களையே விரும்பவேண்டும். இல்லையென்றால், வெறுத்து ஒதுக்குகிற தீய

நினைவுகள் மன்றாடிக் கொண்டு மனதுக்குள் வந்து விடும். விளக்கம்: மனத்துக் கண் மாசிலன் ஆதல் வேண்டுமென்பதுதான் வள்ளுவரின் வாழ்க்கையின் வேட்கையாக அமைந்து இருந்தது.