பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா விளக்கம்: இலன் என்று என்ற சொற்கள் தாம், இந்தக் குறளில், முதன்மை நிலை வகிக்கின்றன. தான் வறியவன் என்றும், பொருள் இல்லாதவன் என்றும், பல உரையாசிரியர்கள் பொருள் கண்டிருக்கின்றனர். நான் இலன் என்பதற்கு, ஏதும் துணையில்லாதவன், எந்தவித ஆதரவும் இல்லாதவன், உடல் வலிமையில்லாதவன், எதிர்த்து செயல்பட இயலாதவன் என்பதாகப் பொருள் கூறியிருக்கிறேன். வறியவன்தான் வம்படி காரியங்களுக்குப் போவான் என்பதைப் போலவே, வாழ்வின் வழக்கமும் இருக்கத்தான் இருக்கிறது. இங்கே, இலன் என்று என்பது, அவனால் ஏதும் செய்ய இயலாது, எதிர்த்துச் செயல்பட முடியாது என்பதால், அவர்களிடம் போய் தீய செயல்களைச் செய்யாதீர்கள். அவன் ஒதுங்கிப் போவான் அல்லது ஒடிப்போவான் அல்லது ஒளிந்து கொள்வான். - அப்படி அச்சப்பட்டு நிற்பவர்களிடம், உங்கள் ஆணவத்தைக் காட்டி, அக்ரமங்கள் செய்தால், உங்கள் பாவச் செயல்கள், உங்களைத் திருப்பித்தாக்குகிறபோது, உங்கள் நிலைமையும் இல்லாது போகும். அதாவது, உங்கள் பாவம், உங்களை விடாது, உங்கள் தீய செயல்களால், நீங்களும் தனிமைப்படுத்தப் படுவீர்கள். தாங்குகிற நட்பும் உறவும், தாமாகவே விலகிச் செல்லும். உங்கள் உள்ளத்தில் புகுந்த கள்ளம், உங்களைப் பாடாய்ப் படுத்தும். உடலை வருத்தும். பலஹீனப்படுத்தும். அத்தனைத் துன்பங்களிலும் ஆட்படுத்தும். அப்பொழுது உங்கள் நிலைமை இலனாகும். ஆனால் பிறவும் உங்கள் நிலையைப் பரிகசிக்கும் பாழ்படுத்தும். வாழ்வு சுகங்களில் இருந்து வறுமைப்படுத்தும். சிறுமையில் ஆழ்த்தும். பெருமையைக் குலைக்கும். ஆகவே, தனியாட்களை சஞ்சலப்படுத்தாதீர்கள். உங்கள் ஆணவம், அகங்காரம், கர்வம், தற்போதம், தலைக்கணம் எல்லாமே உங்களைத் தரித்திரராக ஆக்கிவிடும் என்று 5 வது குறளில், வலிமை இலாதவரையும் வாழவிடுங்கள். வதைத்து வளம் காணாதீர்கள் என்று வள்ளுவர் எச்சரித்திருக்கிறார். - of