பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 189 இழுக்கத்தின் உடல் நலமழிக்கும் காரியங்களைச் செய்பவர் எய்தா - எதுவுமே நன்றாகி விடாமல் பழி எய்துவர் - ஒன்றுக்கும் உதவாதவன் என்ற கீழ்மையை அடைவர் சொல் விளக்கம்: மேன்மை = ஏற்றம், இளமை; எய்து பயன் அனுபவி எய்த - நன்றாக பழி - ஒன்று உதவாதவன், இகழ்ச்சி, நிந்தை முற்கால உரை: ஒழுக்கத்தானே எல்லோரும் மேம்பாட்டை எய்துவர். அதனின்றும் இழுக்குதலானே, எய்தற்குரித்தல்லாத பழியை எய்துவர். தற்கால உரை: ஒருவருக்கு நல்லொழுக்கம் என்பது எப்பொழுதும் மேம்பாட்டையே தரும். தீய ஒழுக்கம் எப்பொழுதும் கீழ்மையையே பயக்கும். புதிய உரை: ஒழுக்கமானது உடலுக்கு இளமையைத் தரும். இழுக்கமானது ஒன்றுக்கும் உதவாதவன் என்ற கீழான வாழ்வையே அளித்து விடும். விளக்கம்: உடலைக் காப்பது ஒழுக்கம். ஒழுக்கத்தில் நடப்பது நலச் செயல்கள். உடலை அழிப்பது இழுக்கம். இங்கே இரண்டு குறிப்புக்களை வள்ளுவர் காட்டுகிறார். ஒழுக்கமான செயல்களால் உடலுக்கு வலிமை மட்டுமல்ல, இளமையும் சேர்கிறது. (இள+மெய்) இழுக்கத்தினாலே நோய்களுக்கு ஆளாகி, நொந்து நிந்தை அடைந்து ஒன்றுக்கும் உதவாதவனாகி விடுகிறான். அதனையே பழி என்கிறார். பழிபாவம் செயல்களுக்கே பாவம் என்று பெயர். பாவிகள் எல்லாம் ஒன்றுக்கும் உதவாமல் போவதற்கு என்ன காரணம்? உடலால் அழிந்தால் உயிரால் அழிவர். திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் என்கிறார் திருமூலர். நோய்மை வந்தாலே துய்மை இல்லை. வாய்மை இல்லை. இப்படி இருந்தால் அவன் வாழ்ந்து என்ன பயன்? அதனால் எய்தாப் பழி என்றார். இளமை காக்க ஒழுக்கம் தேவை என்பதை 7 வது குறளில் வள்ளுவர் உள்ளம் களிப்புற வலியிறுத் திருயிருக்கிறார்.