பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக மொழிகளில் நூல் தொகுப்புக் கலை 73 ஐரோப்பிய மொழிகளுள் தொன்மைப் பெருமையுடைய கிரீக் மொழியில் கி.மு. முதல் நூற்றாண்டிலும், அதற்கு அடுத்த தகுதியுடைய இலத்தீன் மொழியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண் டளவிலும் முதன் முதலாகத் தொகை நூல்கள் தோன்றின என்று கண்டோம். இந்த மொழிகளைப் போலவே தொன்மைப் பெருமையுடையதும் இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத் an 53 (Indo-European Languages) G&##53) lostòu &lhé 3055 மொழியில், கி.பி. பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதல் தொகைநூல் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. பதினைந்து பதினாறாம் நூற்றாண்டளவில் முதல் தொகை நூலைப் பெற்ற - உலகப் பொது மொழிகளாகக் கருதப்படுகின்ற பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகட்கு முன்பே, சம்சுகிருதம் பத்தாம் நூற்றாண்டிலேயே முதல் தொகை நூலைப் பெற்றி ருப்பது, அதன் தொன்மைப் பெருமைக்கு ஒரளவு முட்டுக் கொடுத்துக்கொண்டு நிற்கிறது. இனிச் சில தொகை நூல்கள். வருமாறு:- - வடமொழியில் முதல் தொகை நூலாகச் சொல்லப் படுவது கiந்த்ர வசன சமுச்சயம் என்னும் நூலாகும். இது பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொகுக்கப் பெற்றதாம். முன் நூற்றாண்டுகளில் வாழ்ந்த புலவர்களின் பாடல்களுடன், பத்தாம் நூற்றாண்டுப் புலவர்களின் பாடல்களும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகை நூலின் காலத்தை இன்னும் பின்னுக்குத் தள்ளுபவரும் உளர். இந்நூற் பாடல்கள், நீதி, நல்லொழுக்கம், அரசியல், இன்பம் முதலிய பொருள் கள் பற்றியவையாகும். இந்தத் தொகை நூலின் கையெழுத் துப்படி (Manuscript) முதன் முதலில் நேபாளத்தில் அகப்பட்ட தாம். சமுச்சயம்’ என்றால் தொகுதி என்று பொருள். கவீந்த்ர வசனம்' என்பது கவியரசர்களின் மொழி எனப் பொருள் படலாம். எனவே, சிறந்த கவிஞர்களின் பாடல் தொகுப்பு என இந்நூலின் பெயருக்குப் பொருள் கொள்ளலாம். அடுத்து, பிரசன்ன சாகித்ய ரத்நஹாரா என்னும் தொகை நூல் அறியப்படுகிறது. சாகித்யம் என்றால் பாடல். ரத்நஹாரா என்றால் இரத்தினமாலை. எனவே, சிறந்த