பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தமிழ் நூல் தொகுப்புக் கலை வதோடு நின்று விடாமல், பல நூல்களையும் படித்துப் பல் வேறு சுவையுணர்வூட்டும் பாடல்கள் பலவற்றையும் யான் இதில் தொகுத்துள்ளேன். இத் தொகுப்பைப் பற்றிச்சிலர் நிறை யும் சிலர் குறையும் கூறுகின்றனர். இன்னும் சில வகைப் பாடல்களைச் சேர்த்திருக்கலாம் என்பது சிலரது கருத்து. 'இப் பாடல்களிலிருந்து சிலவற்றை விலக்கிவிட்டிருக்கலாம்' என்பது மற்றொரு சாரார் கருத்து. இதுபற்றியெல்லாம் யான் கவலை கொள்ள வில்லை. இயன்றவரை பலருக்கும் பயன்படும் அளவில் இந்நூலைத் தொகுத்தேன்...” இவ்வாறாகப் பல கருத்துக்களைத் தொகுப்பாசிரியர் தமது முன்னுரையில் சொல்லிக்கொண்டு செல்கிறார். இத் தொகை நூல் அமைப்பின் மாதிரிக்காக, முதல் புலவர், இறுதிப் புலவர் ஆகியோரின் பெயர்கட்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புக்கள் வருமாறு: முதற் புலவர்: VILLON Francois de Montcorbier, alias des Loges, plus connu sous le nom de Francois Villon; ne a’ Paris en 1431- more en 1489. “Le reste des.........que jamais” (9 வரிகள் தர்ப்பட்டுள்ளன) CLEMENT MAROT (Avertissement aux lecteurs des poesies de Villon.) மேலுள்ள பிரெஞ்சுப் பகுதியின் கருத்து வருமாறு: இந்தப் பாடல் ஆசிரியரின் பெயர் 'ஃபிரான்சுவா வில்லான்’ என்று கூறினால் அனைவரும் நன்கு அறிவர். இவரே, ஃபிரான்சுவா தெ மோன்த் கொர்பியர், லோழ், என்னும் பெயர்களாலும் குறிப்பிடப்படுவார். இவர் பாரிசில் கி. பி. 1431-இல் பிறந்தார்; 1489-இல் இறந்தார். வில்லோன் பாடல்களைப் படிப்பவர்க்கு எச்சரிக்கை என்னும் பொருள் பற்றி கிளமான் மரோ (Clement Marot) என்பவர் ஒன்பது