பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 தமிழ்நூல் தொகுப்புக் கலை ஈண்டு ஒன்பது என்று பொருளாம். அதனால்தான், ஒன்பான் கோவைக்கு எடுத்துக் காட்டாக, தொண்டுபடு திவவின் முண்டக நல் யாழ்' என்பதை உரையாசிரியர் குறிப்பிட்டுள் ளார். இப்படியொரு வழக்காறு, -- தொடித் திரிவன்ன தொண்டுபடு திவவின் எனச் சங்க நூலாகிய மலைபடு கடாத்திலும் (வரி:21) வந்துள்ளது. இத் தகைய ஒப்புமை யமைப்பினைக் காணுங்கால், ஆசிரியமாலைப் பாடல்கள் சங்கத் தொகை நூற்பாடல்களைப் போலவே தொன்மையுடையன என்பது புலனாகலாம். தமிழிசை நூலா? ஆசிரிய மாலை ஒரு தமிழிசைப் பாடல் நூல் என ஒரு சாரார் கூறுகின்றனர். தொண்டு படு திவவின் முண்டக நல்யாழ்' என யாழைப் பற்றிக் கூறப்பட்டிருத்தலின் அவர்கள் அங்ங்னம் கருதுவதாகத் தெரிகிறது. யாழ் பற்றிய செய்திகள் பல நூல்களிலும் வருவதாலும், ஆசிரிய மாலையின் மற்றப் பாடல்களைக் காணுங்கால் இசை நூலாகத் தெரியவில்லை யாதலாலும், இங்ங்னம் பார்த்தால் எல்லாப் பாடல் நூல் களுமே இசை நூல்களாகும் எனச் சொல்ல வேண்டு மாதலா னும், இவர்தம் கருத்துப் பொருந்துமாறில்லை. ஒரு வேளை இந்நூற் பாடல்கள் இசையமைத்துப் பாடப்பட்டிருக்கலாமோ என்னவோ! பழம் பாடல்களின் தொகுப்பு நூலாகத் தோன்றுகின்ற ஆசிரிய மாலைப் பாடல்களின் ஆசிரியர்கள் பற்றியோ, காலம் பற்றியோ, தொகுப்பாசிரியர் பற்றியோ, தொகுத்த முறை பற்றியோ ஒன்றும் புலப்படவில்லை. இந்நூலைப் பற்றி ஒரள வாயினும் அறிமுகஞ் செய்து வைத்த புறத்திரட்டு வாழ்க! 32. பன்னிரு பாட்டியல் பாட்டியல் என்பது யாப்பிலக்கணம் ஆகும். தொல்காப்பி யர் தமது தொல்காப்பிய நூலில் தாம் இயற்றியுள்ள யாப் பிலக்கணப் பகுதிக்குச் செய்யுள் இயல்' எனப் பெயர் இட்டுள்