பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23.24. கலித்தொகையும் பரிபாடலும் பாடல் எண்ணிக்கை: இறையனார் அகப்பொருள் உரையில் கலித்தொகை என் னும் நூல் நூற்றைம்பது கலி' என்னும் பெயருடன் ஏழாவது தொகை நூலாகவும், பரிபாடல் என்னும் நூல், எழுபது பரி பாடல்' என்னும் பெயருடன் எட்டாவதாகவும் அமைக்கப் பெற்றுள்ளன. நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானுறு, நற்றிணை நானூறு,புறநானூறு என்னும் நூற்பெயர் களின் இறுதியில் நூற்பாடல்களின் எண்ணளவு குறிக்கப் பட்டிருப்பது போல் இல்லாமல், நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல் என நூற்பாடல்களின் எண்ணளவு நூற்பெயர் களின் முன்னாலேயே குறிப்பிடப் பட்டிருப்பது ஒரு புதுமா திரியாகும். தலைச்சங்க நூல்களுள் பரிபாடல்' என்னும் ஒன்றையும்' இடைச்சங்க நூல்களும் கலி' என ஒன்றையும் இறையனார் அகப்பொருள் உரை குறிப்பிட்டுக் கூறியிருப்பதால், அவற்றி னும் வேறுபாடு தெரிவதற்காக, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல் என இக் கடைச்சங்கத் தொகை நூல்களை இறை யனார் அகப்பொருள் உரை எண்ணிக்கையிட்டுக் கூறியது போலும்! இவ்வாறு எண்ணிட்டுக், கூறியிருப்பதால் இன்னொரு நன்மையும் உண்டு. கலித்தொகையில் இத்தனை பாடல்களும் பரிபாடலில் இத்தனை பாடல்களும் உண்டு என்னும் உறுதியான முடிவு நமக்குக் கிடைக்கிறது. இப்போதுள்ள பரிபாடல் நூலில் இருபத்திரண்டு பாடல்களே உள்ளன; மற்றவை கிடைக்க வில்லை. ஆயினும், இறை யனார் அகப்பொருள் உரையால், பரிபாடல் எழுபது பாடல் கொண்டது என்னும் உண்மை தெரியவருகிறது. * இறையனார் அகப்பொருள் உரையின் மரபை யொட்டிப் பின்வந்தவரும் நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல் எனக் கூறலாயினர். தொல்காப்பியம்-செய்யுளியலில் உள் தரவின்றா கித் தாழிசை பெற்றும் என்னும் (149-ஆம்) நூற்பாவின்கீழ்ப் பேராசிரியர் வரைந்துள்ள.