பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா உடலைக் கூடாக்கும். பாடுபடுத்தும். குற்றத்தின் சுற்றங்களான கேடுகள் பலவற்றைக் கூட்டி வந்து சேர்க்கும் என்று முதல் குறளில் வெஃகாமையின் வேகத்தை விவரித்துக் காட்டியிருக்கிறார். 172. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர் பொருள் விளக்கம்: படுபயன் கொடுமைமிகு இழிவான செல்வத்தை வெஃகி = அடைவதற்காக செய்யார் = நேர்மையுடையவரான நடுவன்மை = நீதி குணம் கொண்டவர் நாணு = தன் அடக்கத்தால் பழிபடுவ - பாவம் செய்கிற இழி மகன் போல பவர் = பாவியாக மாட்டார் சொல் விளக்கம்: படு = கொடுமை, இழிவான பயன் = செல்வம்; பழி - பாவம் படுவ இழிமகன், படுவி - இழிமகள்; செய்யார் = பகைவர் செய்யர் = நேர்மையாளர்; பவர் - பாவி நடுவன்மை = நீதி குணம் முற்கால உரை: நடுவுநிலைமை அன்மையை அஞ்சுபவர் பிறர் பொருளை வெளவினால் தமக்கு வரும் பயனை விரும்பி படுஞ் செயல்களைச் செய்யார். தற்கால உரை: நடுவுநிலைமை தவறுவதற்கு அஞ்சி வெட்கப்படுபவர். தமக்கு உண்டாகும் பயனை விரும் பிப் பழி வந்தடையும் செயல்களைச் செய்ய மாட்டார். புதிய உரை: கொடுமை தரும் இழிவான செல்வத்தை அடைவதற்காக, நேர்மையும் நீதி குணம் கொண்டவர்கள், தம் அடக்கத்தால் இழிமகன் போல காரியங்களைப் புரியமாட்டார். விளக்கம்: செல்வம் என்பது கொடுமை புரியச் சொல்வது. இழிவாக நடந்து கொள்ள வைப்பது நேர்மையை மாற்றி விடுவது. அடக்கத்தை விரட்டி ஆலாய் பறக்க வைப்பது. பழிபாவத்திற்கு அஞ்சாத இழிமகனாய் ஆக்கி விடுவது.