பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/727

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 705 பூத்து மலர்ந்ததும் மூல மரம் அழிந்து விடும். அதனால்தான், ஆல்போல் தழைத்தும் அறுகுபோல் வேர் ஊன்றியும் வாழ்க -ஆனால் மூங்கில் போல் அழியாமல்-வாழ்க என்று வாழ்த்து கின்றனர். ஈண்டு, 'நண்டு சிப்பி வேய் கதலி நாசமுறுங் காலத்தில் கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல்...” என்னும் நீதி வெண்பாப் பாடல் ஒப்பு நோக்கத்தக்கது. வேய் = மூங்கில், முருகவேள் பன்னிரு திருமுறை தொகுத்து உரையும் எழுதியவர் வ.சு. செங்கல்வராயப் பிள்ளை. முதல் பதிப்பு, 1951 ஆம் ஆண்டு, வ.சு செங்கல்வ ராயப் பிள்ளை வ.ச.மயிலேறும் பெருமாள் பிள்ளை ஆகியோரால் வெளிவந்தது. இரண்டாம் பதிப்பு, 1952 ஆம் ஆண்டு, சென்னை மீனாட்சி கலியாண சுந்தரம் என்பவரால் வெளிவந்தது. மூன்றாம் பதிப்பு, 1965 ஆம் ஆண்டு, சென்னை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் வெளிவந்தது. முருகனைப் பற்றிய பன்னிரண்டு படைப்புகளின் தொகுப்பு இந்நூல். பன்னிரண்டாவண்: 1. முதல் 6-ஆறு படை வீட்டுத் திருப்புகழ்கள் 7. பிற ஊர்த் திருப்புகழ்கள் பல 8. கந்த ரலங்காரம்-கந்த ரந்தாதி 9. திரு வகுப்பு, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம் 10. கந்தரது பூதி - 11. முருக அடியார்கள் பலர் பாடியுள்ளனவற்றிலிருந்து திரட்டப்பட்ட சில பகுதிகள், திருமுருகாற்றுப்படை 12. சேய்த் தொண்டர் புராணம் - வரகவி தேனூர்ச் சொக்கலிங்கம் பிள்ளை இயற்றியது. மொத்தப் பாக்கள் 2708.