பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐங்குறுநூறு 293 'எனவேட் டோளே யாயே யாமே நனைய காஞ்சிச் சினைய சிறுமீன் யாணர் ஊரன் வாழ்க பாணனும் வாழ்க எனவேட் டேமே. (பத்தாவது பாடல்) 'வாழி யாதன் வாழி யவினி மாரி வாய்க்க வளம்கனி சிறக்க எனவேட் டோளே யாயே யாமே பூத்த மாஅத்துப் புலாலஞ் சிறுமீன் தண்டுறை யூரன் தன்னொடு கொண்டனன் செல்க எனவேட் டேமே." இவ்வளவு சிறப்புமிக்க வேட்கைப் பத்தை முதலிலே கொண்ட மருதத்திணை ஐங்குறு நூற்றில் முதலில் அமைக்கப் பெற்றிருப்பது மிக்க பொருத்தமே! மருதத்திணையை யடுத்து நெய்தல் திணை இரண்டா வதாக நிறுத்தப் பெற்றுள்ளது. இந்தத் திணையிலும், முதல் பத்தில் உள்ள எல்லாப் பாடல்களும் அன்னை வாழி வேண் டன்னை எனவும், இரண்டாம் பத்தில் உள்ள எல்லாப் பாடல்களும் 'அம்ம வாழி தோழி எனவும் வாழ்த்தொலி யுடன் தொடங்கப் பட்டிருப்பதால், நெய்தல் திணை இரண்டாவதாக்கப்பட்டது என்று கூறலாம். இதனினும் சிறந்த காரணம் ஒன்று உண்டு. ஐங்குறு நூற்றைத் தொகுப் பித்தவன் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை. இவன் தொண்டியை யாண்டவன். இந்தத் தொண்டியின் பெயரால், தொண்டிப் பத்து’ என்னும் ஒரு பத்து நெய்தல் திணைப் பகுதியில் உள்ளது. இந்தப் பத்திலுள்ள பாடல்கள் அனைத்திலும் தொண்டி மிகவும் சிறப்பித்துப் பாராட்டப் பெற்றுள்ளது. தொண்டி கடற்கரைப் பட்டணமாகும். நெய்தல் திணையும் கடற்கரை சார்ந்தது. எனவே, ஐங்குறு நூற்றில் நெய்தல் திணை இரண்டாவது இடம் பெற்றிருப்பது பொருத்தமேயாகும்.