பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

660 தமிழ்நூல் தொகுப்புக் கலை ஒன்று திரட்டிக் கிட்டப்பாவும் சிவானந்தமும் வெளியிட் டுள்ளனர். இந்நூல், பரத நாட்டியத்திற்கு இன்றியமை யாத நடனப் பாடல்களின் முதலாவது நூலாகும். அலாரிப்பு, ஜதிஸ்வரம், சப்தம், ஸ்வரஜதி, செளக வர்ணம், தானவர்ணம், (இராக) மாலிகை, பதம், ஜாவளி, தில்லானா, ஸ்வர சாகித்தியம் முதலியன அமைந்த நூலாகும். R. 5334 - ஏழு நகர் ஐந்நூற்று வணிகர் மீது பாடல்கள் எழு நூறு வணிகர் குல மரபின் பெருமைகளும் அவர்கள் (தமிழர்கள்) பரவி வாழ்ந்த இடங்களும் அவர்களின் இயல்பு களும் பழைய மரபுகளும் அறிய உதவும் பாடல்களின் திரட்டு இது. R. 2223. பலவகை மந்திரங்கள் வராகி மாலை 30 பாட்டு, நவரத்தினமாலை 10, தேள் கடி வசியம் - பெண் வசியம் முதலிய மந்திரப்பாடல்கள், உச்சாடணங்கள், சக்கரங்கள்-முதலியன பற்றிய பாடல்கள். R. 1918. ஆண்டவர் பாடல்கள் இதில், திரு நெல்லையம்மன் வணக்கம், கோப்புடையான் வணக்கம், விஷ்ணு வணக்கம், சொரூப வணக்கம், அருளிறை வணக்கம், குல குரு வணக்கம், முத்தி நிச்சயம், தெய்வ நிச்சயம், மனத்திற்கு அறிவுறுத்தல், பொதுவாகக் கூறியது, புத்திக்கு அறிவுறுத்தியது, நெஞ்சோடு இரங்கல், தெய்வத்தை விளித்தது, கிளிப்பத்து, சந்த விருத்தம் முதலியவை உள்ளன. R. 2932. பல சந்தப் பாடல்கள் பாரதம் - கன்ன பருவத்தில் சில, சிங்கை எல்லம்மை மீது பாடல்கள், பாரத நாடகத்தில் விதுரன்-அருச்சுனன் வாயி லாகக் கருத்துப் பாடல்கள், காளமேகத்தின் பாடல்கள் இரண்டு, சீரங்கப் பாடல்கள், நந்திக் கலம்பகப் பாடல்கள் சில- - இதில் உள்ளன. தொகுப்பாசிரியர் யாரோ ஒருவர் தம் மனம் போன போக்கில் பலவற்றைத் தொகுத்துள்ளார்.