பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாகடர் எஸ். நவராஜ் செல்லையா

  • =

560 361. அவாளன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவா,அப் பிறப்புஈனும் வித்து பொருள் விளக்கம்: அவாஎன்ப ஆசை கொள்ளுதல் என்பது எல்லா உயிர்க்கும் - எல்லா உயிர்களுக்கும் உண்டு எஞ்ஞான்றும் எப்பொழுதும் தவா அப்பிறப்பு உறுதியான தொடக்கத்தை ஈறும் = தந்து வித்து = அறியவைக்கும் அறிவுடையவராக்கும் சொல் விளக்கம்: தவா = உறுதிநிலை; வித்து அறிஞன், அறிதல் ஈனும் = உண்டாக்கும் முற்கால உரை: எல்லாவுயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற வெறுப்பினை விளைவிக்கும் வித்து அவாவென்று சொல்லுவர் நூலோர். f தற்கால உரை: எல்லா உயிர்களுக்கும், எப்பொழுதும் விடாது துன்பத்தை விளைவிக்கும் விதையே அவாதான் என்று ஆன்றோர்கள் சொல்லுவார்கள். s புதிய உரை: ஆசை என்பது எல்லா மக்களுக்கும் உண்டு. அந்த ஆசை எப்பொழுது ஆரம்ப நிலையில் இருக்கிறதோ அப்பொழுதே அவர்களுக்கு அறிதலை உண்டாக்கி அறிஞராக்கும். விளக்கம்: அவாவின் ஆரம்ப நிலை. அது முளைவிட்டுக் கிளம்புகிற இள நிலையில், மனதுக்கு இதமாகவே இருக்கும். எந்தத் தீய செயலும் தோன்றுகிற போது இனிய முகம் காட்டும். துணைவருவது போலத் தோற்றத்தை உண்டாக்கும். உடலுக்குச் செழிப்பை த் தருவதுபோல, மாயையை ஏற்படுத்தும். மனதுக்கு அறுசுவை விருந்தாக உண்பிக்கும். அதுதான் தங்களை உ ய்விக்கும் என்று தடித்தனமாக நம்பவைக்கும். கொடிய மிருகங்களின் குட்டிகள்,