பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 தமிழ் நூல் தொகுப்புக் கலை இது நச்சினார்க்கினியர் உரைப் பகுதி. இவரும் இளம் பூரணர் போலவே முமுப் பாடலையும் சிறுசிறு பாடவேறு பாடுகளுடன் (பிரதி பேதம்) தந்துள்ளார். இந்தப் பாடல் ஆசிரிய மாலை என்னும் நூலைச் சேர்ந்தது என்பது, நூற் பெயருடன் இப்பாடல் புறத்திரட்டில் தொகுக்கப்பட்டுள்ள தால் தெரிகிறது. - “எட்டுவகை துதலிய அவை தொல்காப்பியப் பகுதிக்கும் இந்தப் பாடலுக்கும் சொல்லிவைத்துச் செய்தால் போன்ற பொருத்தம் காணப்படுகிறது. இந்தப் பாடலைப் பார்த்துத் தொல்காப்பியர் நூற்பா இயற்றினாரா? இந்த நூற்பவைப் பார்த்து இப் பாடல் இயற்றினாரா? - என்று ஐயுறக்கூடிய வகையில் பொருத்தப்பாடு உள்ளது. அதனால், இந்தப் பாடல் மிகவும் பழமையானது என்பது தெளிவாகிறது. எனவே, ஆசிரியமாலை, சங்ககாலத்தையொட்டிய பழம் பாடல்களை யும் தன்னகத்தே தொகுக்கப்பெற்று வைத்துள்ளது என உணரலாம். தொல்காப்பியம் புறத்திணையியலில், கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும் என்னும் (12-ஆம்) நூற்பாவின் இடையே யுள்ள தோலின் பெருக்கமும் என்னும் பகுதிக்கு உரிய உரை விளக்கத்திலும் நச்சினார்க்கினியர் ஆசிரிய மாலைப் பாட லொன்றை எடுத்தாண்டுள்ளார். அந்த உரைப்பகுதி வரு மாறு: தோலின் பெருக்கமும்= அங்ங்ணம் மதின்மேற் சென்றுழி மதிலகத்தோர் அப்புமாரி விலக்குதற்குக் கிடுகுங் கேடகமும் மிடையக் கொண்டு சேறலும்: 'இருசுடர் இயங்காப் பெருமூ திலங்கை கெடுந்தோள் இராமன் கடந்த ஞான்றை யெண்கிடை மிடைந்த பைங்கட் சேனையிற் பச்சை போர்த்த பல்புறத் தண்டை எச்சார் மருங்கினும் எயிற்புறத் திறுத்தலிற்