பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா _ - o தற்கால உரை: ஒரே முறையாகப் பொருந்துதல் இல்லாத உலகத்தில், புகழ் ஒன்றுமே அல்லாமல், அழியாது நிலை பெறக் கூடியது வேறு ஒன்றும் இல்லை. புதிய உரை: மயக்கத்தையும் மாறான நச்சுத் தன்மை கொண்டு பொருந்தாமல் பகை பாராட்டுகின்ற உலக மக்களிடையே, மேலாண்மை மிக்க அருஞ்செயலை, அழிந்து போகாது காத்து நிலைக்கச் செய்வது ஒருமுகப்பட்ட இல்லறமே. விளக்கம்: ஒன்றா உலகம், அல் உலகம், ஆல் உலகம், என மூன்று சொற்களால், உலக மக்களின் நிலையைத், தரம் பிரித்துக் காட்டுகின்றார் வள்ளுவர். எதிலுமே ஒத்துப் போகாமல், எதையுமே ஏற்றுக் கொள்ளாமல், விதண்டாவாதம் செய்கிற, பகைமை பாராட்டுகிற, எப்போதும் பொருந்திப் போகாத உலகம். அந்த உலகம், அடுத்தவருக்கு மயக்கத்தையும் குழப்பத்தையும், கலக்கத்தையும், கடுமையான சூழ்நிலை களையுமே உருவாக்கும் அப்படிப்பட்ட உலகம், அதாவது மக்களிடம் எப்படிப் புகழை நிலை நிறுத்த முடியும் என்னும் ஒரு வினாவை எழுப்பி, விடையையும் விளக்கமாகத் தருகிறார். உயர்ந்த புகழானது, பிறர் தூற்றினாலும் சிறந்து விளங்குகிற அருஞ் செயலானது, பகைமை பாராட்டுவோர் மத்தியிலும், மனத்திலும், நிலையாய்த் தங்கி, நிலைத்து நிற்க வேண்டுமானால், உடல், மனத்தால், ஆத்மாவால் மட்டும் நிகழ்த்த முடியாது. ஒன்றுபட்ட இல்லறத்தால் மட்டுமே முடியும் என்கிறார் வள்ளுவர். ஒன்று இல் ஒன்றுபடுகிற, மனமும் உடலும் பொருந்துகிற, ஒற்றுமையால், வாய்மையால், ஒப்பற்ற பணியால் மட்டுமே முடியும். இல்லறமாகிய நல்லறம். அந்த நல்லறத்தில் நற்பண்புகள் வந்தாரை மகிழ்விக்கும் வள்ளல் தன்மைகள். இணங்கி அவர்ோடு பழகும் இனிய குணங்கள். ஒன்றைத் தந்தாலும் நன்றாய்ப் பயன்படுகிற முறைகளில் வழங்குதல் எல்லாமே, பகைவரையும் பாராட்டச் செய்யும்; பொருந்தாதவரையும் பொருந்தவைக்கும்.