பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தமிழ் நூல் தொகுப்புக் கலை கரந்தையும் நொச்சியும் முறையே வெட்சிக்கும் உழிஞைக்கும் மறுதலையாய் அவற்றின்பாற் படுமாதலானும், பொதுவியல் என்பது, பல்லமர் செய்து படையுள் தப்பிய நல்லரண் மாக்கள் எல்லாரும் பெறுதலின் திறப்பட மொழிந்து தெரிய விரித்து முதற்பட எண்ணிய எழுதிணைக்கும் உரித்தே என அவர் தாமே கூறுபவாகலானும், கைக்கிளையும் பெருந் திணையும் புறமாயின் அகத்திணை ஏழென்னாது ஐந்தெனல் வேண்டுதலானும், பிரமம் முதலாகச் சொல்லப்பட்ட மணம் எட்டினுள்ளும் யாழோர் கூட்டமாகிய மணம் ஒன்றனையும் ஒழித்தி ஏனைய புறமாதல் வேண்டுதலானும், முனைவ னுரலிற்கும் கலி முதலாகிய சான்றோர் செய்யுட்கும் உயர்ந் தோர் வழக்கிற்கும் இயையாமையானும், அங்ங்னங் கூறுதல் பொருந்தாதென மறுக்க. என்னும் உரைப்பகுதியாலும், அதே புறத்திணையியலி லுள்ள, 'அவற்றுள்' வெட்சி தானே குறிஞ்சியது புறனே உட்குவரப் பொருபோர் உறுமுறை தொடங்கிய வேந்துவிடு முனைஞர் வேற்றுப் புலக் களவின ஆதங் தோம்பலும் அங்கிரை மீட்டலும் என இரு பாற்றே அஃதென மொழிய, என்னும் நான்காம் நூற்பாவின் கீழ், அதே ஆசிரியர் எழுதி யுள்ள, “ஆதந் தோம்பலும் அந்நிரை மீட்டலும் என இருபாற்று என்னாது, 'தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென்று அன்ன இரு வகைத்தே வெட்சி’ எனப் பன்னிரு படலத்துட் கூறியவாறு கூறின், முன்வருகின்ற வஞ்சி முதலியவற்றின் பொருளாகிய எடுத்துச் செலவு முதலி