பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு பொருள் விளக்கம்: ஒரு-வன் = ஒரு வலிமையுள்ள தன் - ஆன்மாவான (தன்) நெஞ்சத்து = மனதிற்குள்ளே அழுக்காறு இலாத - மனக்கோட்டம் இல்லாத இயல்பு = தகுதி, ஒழுக்கம் போன்றவற்றை ஒழுக்க ஆறாக அறம் சார்ந்த நல்வழியில், கொள்க - எப்பொழுதும் கொண்டிருக்க வேண்டும். சொல் விளக்கம்: வன் = வலிமை; தன் - ஆன்மா ஆறு நல்வழி, அறம் உபாயம் இயல்பு = தகுதி, பலம், ஒழுக்கம் முற்கால உரை: ஒருவன் தன் நெஞ்சத்தின்கண் அழுக்காறு எனும் குற்றமில்லாத இயல்பினையே தனக்கோதிய ஒழுக்க நெறியாகக் கொள்ள வேண்டும். தற்கால உரை: நெஞ்சம் பொறாமை இல்லாதிருப்பதை, வாழ்க்கை ஒழுக்கமாகக் கொள்ள வேண்டும். புதிய உரை: வலிமையுள்ள ஆன்மாவிற்குள் விளங்கும் மனத்திலே, மனமாசுகள் இல்லாமல் வாழ்கிற தகுதியையும், பலத்தையும் ஒழுக்கத்தின் வழியாக வளர்த்துக் கொள்ள வேண்டும். விளக்கம்: உலகத்தை அளக்கலாம். ஆனால் உள்ளத்தை அளக்க முடியாது. மகேசனைக் கூடப் புரிந்து கொள்ளலாம். ஆனால், மனத்தைப் புரிந்து கொள்ள முடியாது. அதனால்தான் மனத்தைக் குறிப்பிட வந்த வள்ளுவர், வலிமையான நெஞ்சம் என்றார். வலிமையான நெஞ்சம் வலிமையான ஆன்மா வழியே நடத்தப்படுகிறது. எதற்கும் அடங்காத, எதிலும் அடங்காத மனம் அவை ஐம் புலன்களால் அலைக்கழிக்கப்படுகின்றன. அதனால்தான் மனத்தில் அழுக்கு, பிசுக்கு, கசடு போன்ற மாசுகள் புகுந்து,