பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 தமிழ் நூல் தொகுப்புக் கலை சிலவே; அழிந்து போனவையே மிகப் பல. பல நூல்களின் பெயர்கள் மட்டும் இப்போது அறியப்படுகின்றன - நூல்கள் கிடைக்கவில்லை. சில நூல்களில் தப்பித் தவறிச் சில பகுதிகள் மட்டும் கிடைத்துள்ளன. இதற்குக் காரணம் என்ன? பழைய ஒலைச் சுவடிகள் பலவும் இயற்கையாகவும் அழிந்தன-வேண்டும் என்றே திட்டமிட்டும் அழிக்கப்பட்டன. இந்த இருமுறைகளில் ஏதோ ஒரு முறையில், பதிற்றுப் பத்தும் அழிந்து போயிற்று - அல்லது-அழிக்கப்பட்டு விட்டது. ஏசுநாதர் மீண்டும் உயிர்த் தெழுந்ததைப் போல, எங்கோ ஒளிந்து கொண்டிருந்த ஒரே ஒரு சுவடி மட்டும் பின்பொருநாள் தலைகாட்டியது. இந்தச் சுவடியில் முதல் பத்தும் இறுதிப் பத்தும் இழக்கப்பட்டிருந்தன. இந்தச் சுவடியைப் பார்த்தே பின்னர்ப் பல படிகள் பலராலும் எடுத்துக்கொள்ளப் பட்டன. இவ்வாறு முதலும் கடையும் குறைந்த உருவத்தில் பதிற்றுப் பத்து மீண்டும் பரவத் தொடங் கியது. இப்பொழுது கிடைத்துள்ள ஓலைச் சுவடிப் படிகளி லெல்லாம் முதலும் இறுதியும் இல்லாது போனதன் காரணம் இப்போது ஒருவாறு விளங்கலாம். சரி,-மீண்டும் உயிர்த் தெழுந்ததாகக் கூறப்பட்ட ஒரே ஒர் ஒலைச் சுவடியில் முதலும் கடையும் குறைந்தது எவ்வாறு? பதிற்றுப் பத்தின் ஒவ்வொரு பத்தும் தனித்தனியாகக் கட்டப்பட்டுப் பின் இணைத்து வைக்கப்பட்டிருந்திருக்கும் என முன்பே கூறினோம். இந்தப் பதிற்றுப் பத்துச் சுவடி மற்ற நூல்சுவடிகளின் இடையே வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், பதிற்றுப்பத்துச் சுவடியின் முன்னால் வைக்கப் பட்டிருந்த வேறு நூல் சுவடியுடன் பதிற்றுப்பத்தின் முதல் பத்து கலந்து விட்டிருக்கும்; பதிற்றுப் பத்துச் சுவடியின் பின்னால் வைக்கப் பட்டிருந்த வேறு நூல் சுவடியுடன் பதிற்றுப்பத்தின் இறுதிப் பத்து கலந்து விட்டிருக்கும். இச் சுவடிகளைக் கையாண்டு படித்தவர் இறந்து போக, அவரின் வழித்தோன்றல்கள் இவற் றைப் பற்றி ஒன்றும் அறிய மாட்டாமையால், இவ்வாறு முதல்பத்தும் இறுதிப் பத்தும் வேறு நூல்சுவடிகளுடன் தவறுதலாகக் கலக்க விட்டிருக்கலாம்; அல்லதுவேறு விதமாக வும் நேர்ந்திருக்கலாம்; அஃதாவது: