பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/785

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாற்றுக் கருத்து ஆய்வு 763 அரசர்கள் பதின்மரைப்பற்றிப் புலவர்கள் பதின்மர் பத்துப் பத்துப்பாடல்கள் வீதம் பாடியுள்ள பதிற்றுப்பத்துக்கு, மற்ற தொகை நூல்களினும், தொகுப்பு முயற்சி குறைவே. நானூறுஐந்நூறு பாடல்கள் கொண்ட தொகை நூல்களினும் இது மிகவும் சிறியதா யிருப்பதால், வரிசையில் பின்னுக்குத் தள்ளப் பட்டிருப்பதில் வியப்பில்லை. இது சேரநாட்டில் தொகுக்கப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும், பாண்டிய நாட்டில் தொகுக்கப்பட்ட மற்ற நூல்களோடு வரிசைப் படுத்தப்பட்டிருப்பதால், எல்லா நூல் களும் ஒரிடத்தில் ஆய்வு செய்யப்பட்டிருக்கவேண்டும். என்பதை மறந்து விடுவதற்கில்லை. - முன்னும் பின்னும் எந்த அடைமொழியும் தராமல் பதிற்றுப் பத்து (நூறு)என வெற்று எண்ணால் பெயர் தந்திருப் பது பொருந்துமா? புரியுமா? நூறு(பதிற்றுப்பத்து) என்று கூறி னால் என்னவென்று புரியும்? இந்தச் சிக்கலுக்குத் தீர்வு யாதுப் நெடுந்தொகை (அகநானூறு) தானுநூறு, குறுந்தொகை நானுாறு நற்றிணை நானுாறு, புறநானூறு, ஐங்குறுநூறு - என மற்ற தொகை நூல்கட்கு, அடை மொழிகளுடன் எண்ணிக்கிைப் பெயர் தந்திருப்பதால், பதிற்றுப் பத்து எனக் கூறினும் இது ஒரு நூல் என்பது புரியும் என்று இப்பெயர் தரப்பட்டிருக்க லாம். அதாவது, அடை மொழிகளுடன் எண்ணிக்கைப் பெயர் தரப்பட்டிருக்கும் மற்ற நூற்பெயர்களை ஒட்டியே பதிற்றுப் பத்து என்னும் பெயர் தந்திருக்க வேண்டும். எனவே, அடை மொழிகளுடன் எண்ணிக்கைப் பெயர் கொண்டுள்ள ஐந்து நூல்கட்குப்பின், இது ஆறாவது நூலாக நிரல் செய்யப் பெற் றுள்ளது. இவ்விதமாக இது காறும் செய்யப்பெற்றுள்ள மாற்றுக் கருத்து ஆய்வு, ஒரு தோற்றமாக-ஒர் உய்த்துணர்வாகச் செய்யப்பட்டதே என்று கொள்ளல் வேண்டும். r