பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/678

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

656 தமிழ்நூல் தொகுப்புக் கலை 'பகவான் ஒரு சாயக்காரன்' என்பது முதல் ‘சங்கொலிக்காரன்' ‘என்பது வரையுள்ள 64 கதைகள் பாடல் வடிவத்தில் தரப்பட் டுள்ளன. ஆழ்வார் அமுது தொ-உரை-ராய.சொக்கலிங்கம். மதராஸ் ரிப்பன் பிரஸ், புதுக்கோட்டை. பன்னிரண்டு ஆழ்வார்களின் பாடல்களி லிருந்து 400 பாடல்கள் தொகுக்கப்பட்டு உரையுடன் வெளி யிடப்பட்டுள்ளன. துன்முகி-வைகாசி. குமரனும் கோசலை குமரனும் என்னும் 'திருப்புகழில் இராமாயணம்' தொ-திரு முருக கிருபானந்த வாரியார். தி லிட்டில் பிளவர் கம்பெனி, சென்னை. மாருதி பிரஸ், சென்னை. இராமர் பற்றி -இராமர் வரலாறு பற்றிக் கூறப்பட்டுள்ள-அருணகிரி நாதரின் திருப்புகழ்ப் பாடல்களின் தொகுப்பு. நூலுக்குக் கொடுத் துள்ள தலைப்பு சுவையாக உள்ளது. சாராமிர்தத் திரட்டு தொ-இராமகிருஷ்ணப் பிள்ளை. பல நூல்களிலிருந்து நீதிப் பாடல்கள் திரட்டப்பட்டுள்ளன. வித்தியார்த்தன அச்சுக் கூடம், சென்னை. 1876, உ - அறத்துப்பால், பொருட்பால் என இரு பிரிவுகள் உள்ளன. அறத்துப்பால் 43 அதிகாரம். பொருட் பால் 53 அதிகாரம். திருக்குறள் முதலிய நீதி நூல்களிலிருந்து பல அதிகாரத் தலைப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. வித்தியா வினோதினி தொகுப்பு - இராமசாமி நாயுடு முதலியோர். பதிப்புடி. சம்பந்த முதலியார். அமெரிக்கன் அச்சுக் கூடம். 1893, இதில் தொடர் வரிசையாக 42 தொகுதிகள் உள்ளன ஒவ்வொரு தொகுதியாக அச்சிட்டனர். முதல் தொகுதி-சூலை 1889, 42 ஆம் தொகுதி-நவம்பர் 1893, தாயுமானவரின் தெய் வீகப் பாடல்கள் போன்ற வரிசையில் வெளிவந்த நூல் இது.