பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251


அவற்றுள் ஒரு துறை, திணைக்கு எப் பாலை குறியீடாகக் கொள்ளப்பட்டது என்பதனை அடையாளம் காட்டு கின்றது. இசைத்தமிழில் பண் நான்கு வகை. அவற்றுள் ஒன்று பாலை. இது யாழ்ப் பெயரில் ஒருவகையில் நான்கு வகைப்படும். மற்றோர் இசையமைப்பில் ஏழு ஆகும். பிறிதோர் (12 ஒரை) அமைப்பில் பன்னிரண்டு ஆகும். இவற்றுள் ஏழு குறிக்கத்தக்கது இதனை, 'ஒரேழ் பாலை' -என்பர். ஈரேழு-பதினான்கு நரம்புகள் கொண்ட யாழ் செங்கோட்டி யாழ் எனப்படும், இதில் செப்பமான பாடலை நிறுத்த முன்னே காட்டிய ஏழு பாலைப் பண்ணை நிறுத்துவது ஒரு முறை, இதனைச் சிலம்பு, 'ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின் ஒரேழ் பாலை நிறுத்த வேண்டி' என்று காட்டுகின்றது. இந்த “ஒரேழ் பாலை” யின் நினைவோடு முன்னே பட்டியலில் உள்ள ஏழிலைப்பாலை' என்னும் பாலை மரத்தையும் பொருத்திப் பார்த்தால் ஏழு எண்ணால் ஒரு பொருத்தம் தென்படுகின்றது. இந்த மரம் ஏழு இலைகளை ஒரு கொத்தாகக் கொண்டிருக்கும். இதனால் இப்பெயர் பெற்றது. இம்மரம் நன்கு பூக்கு.ே கம்பரது வண்ணனை ஒன்று உள்ளது. வலிய களிறு ஒன்று 'பூத்த ஏழிலைப் பாலையைப் (மரத்தை) பொடிப் பொடியாகக் - காத்திரங்களாலே (கால் வலிமையால்)'2 தேய்த்தது என்றார். இவை கொண்டு ஏழிலைப் பாலையே 翡町öD5〕 நிலத்தின் குறியீடென உணரலாம். பாலைப் பூவைப்பற்றி இலக்கியங்களில் தேடிக்கான வேண்டியுள்ளது. பூக்களின் மேடையாம் குறிஞ்சிப்பாட்டு "தில்லை, பாலை, கல் லிவர் முல்லை'8 -எனக் குறிக்கின்றது. 1. சிலம்பு : 3 : 70, 71. 2. கம்ப, வரைக்காட்சி : 6. 2. குறி. பா : 77