பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586 தமிழ் நூல் தொகுப்புக் கலை பிரஸ், உறையூர், திருச்சி. கவிஞர் வாணி தாசனால் அவ்வப் போது எழுதப்பட்டுப் பல இதழ்களில் வெளிவந்த பாடல்களின் தொகுப்பு. 1958. உள்ளுறை: 'தைத்திங்கள் வாழ்க’ என்பது முதல் எங்கும் மகிழ்ச்சி' என்பது வரையுள்ள 46 தலைப்புகளில் பல பாடல்கள் உள்ளன. சிரித்த நுணா வெளியீடு - ஐயை பதிப்பகம், சேலிய மேடு, புதுவை. விற்பனை உரிமை - மனோன்மணி புத்தக நிலையம், சென்னை, மாருதி பிரஸ், சென்னை - 14. 1963."அன்பு முதல் பொங்கல் வாழ்த்து வரை பல தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. ஏழாவது தலைப்பாகிய சிரித்த துணா என்பது நூற்பெயராக வைக்கப்பட்டுள்ளது. வாணிதாசன், இரவு வரவில்லை', 'தொடுவானம்' என்னும் தொகுப்பு நூல்களும் இயற்றியுள்ளார். கண்ணதாசன் பாடல்கள் கண்ணதாசன் பல்பொருள் பற்றிய பாடல்களாகவும்: திரையோவியப் (சினிமாப்) பாடல்கள்ாகவும் ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதியுள்ள சுவைக்கவிஞராவார். அவர் பாடல் நூல்கள் சில காணலாம்: - கண்ணதாசன் கவிதைகள் - முதல் தொகுதி - முதல் பதிப்பு 1959. காவியக்கழகம், சென்னை -2. உள்ளுறை: பழம் பாடல் புதுக்கவிதை, வாழ்க் கையும் வனப்பும், பிரிவும் பரிவும், குறியும் கொள்கையும், காவியம், இசையும் பாட்டும், பல் சுவை, முதல் பாட்டு - ஆகிய எட்டுப் பெரிய தலைப்புகளும் பல உள்தலைப்புகளும் உள்ளன. இரண்டாம் பகுதி - இதில், இரண்டு காவியங்களும் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களும் உள்ளன. கண்ணதாசன் கவிதைகள் முதல் இரண்டு கவிதைத் தொகுப்புகள். முதல் பதிப்பு - செப்டம்பர், 1968, வெளியீடு - வானதி பதிப்பகம், சென்னை