பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை | 85 ஒழுக்கத்தால் உயரச் செய்வதுதான் உயர்ந்தோரின் பண்பாகும். அந்தப் பண்பாற்றலைத்தான் ஒழுக்கம் தருகிறது. அப்படிப்பட்ட ஒழுக்கத்தில் ஒருவர் தவறுகிறபோது விலகிப் பின் வாங்குகிறபோது, அவரது வாழ்வு கீழ்மை அடைகிறது. இருள் அடைகிறது. செயல் மயக்கம் தொடர்கிறது. ஆகவே, ஒழுக்கம்தான் வழிகாட்டி. வாழ்க்கைக்கு முனைப் பூட்டி, சிறப்புக்குச் செயல்காட்டி என்று மூன்றாம் குறளில் ஒழுக்கம் ஒருவரை எப்படி உயர்த்துகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். 134. மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் பொருள் விளக்கம்: பார்பான் = ஆய்ந்தறிந்தோராகிய உயர்ந்தோர் ஒதம் = உரிய இயற்கையான விதி இயல்களை மறப்பினும் = மதியாமல் விட்டு விட்டாலும் கொளல் ஆகும் அதை (உடலும் மனமும்) ஏற்றுக் கொள்ளும். ஒழுக்கம் குன்ற - (ஆனால்) ஒழுக்கமானது குறையக்குறைய பிறப்பு கெடும் - அவரது தோற்றம் சீரழிந்து போகும். சொல் விளக்கம்: மறப்பினும் - விட்டுவிடுதல், மதியாமை ஒத்து = வேதம், இயல், விதி, ஒழுக்கம் பார்ப்பான் = உயர்ந்தோர்; பிறப்பு = தோற்றம் முற்கால உரை: கற்ற வேதத்தினை மறந்தானாயினும், அவ் வருணம் கெடாமையாற் பின்னும் ஒதிக்கொள்ளலாம். அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும். தற்கால உரை: ஒருவன் தான் கற்றதை மறந்து விடுவானேல், அதனை மீண்டும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒழுக்கம் கெடுமானால், அதை மீண்டும் தேடிக் கொள்ள முடியாது. புதிய உரை: இயற்கை விதிகளை அசட்டை செய்து வ பிலக்கினாலும் , மீண்டும் அவற்றை ஏற்று வாழ்வில் தேறலாம். ஆனால், உடல் ஒழுக்கம் குன்றி விட்டால் அவனது உடல் தோற் மே கெட்டு ப்