பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 351 சொல் விளக்கம்: தோன்றுதல் = வெளிப்படல், அறியப்படுதல்; விளங்குதல் புகழோடு = அருஞ்செயலோடு, வெற்றி, வாகை, மேன்மையோடு நன்று = சுகம், நன்மை, சிறப்பு, வாழ்வு. முற்கால உரை: மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க. அக்குணமிலாதார் மக்களாய் பிறத்தலின், விலங்காய் பிறத்தல் நன்று. தற்கால உரை: ஒரு செயலில் ஒருவர் ஈடுபட்டால், அம்முயற்சிக்கும் தமக்கும் புகழுண்டாக ஈடுபடுவாராக. அத்திறம் இல்லார், அதில் ஈடுபடாதிருத்தலே நல்லது. புதிய உரை: மற்றவர்கள் முன்னே அறியப்படும்போது, அருஞ்செயல் ஆற்றுகின்ற மேன்மை நிலையில் வெளிப்படவேண்டும். அப்படிப்பட்ட ஆற்றல் இல்லாதவர்கள், அறியப் படாதிருப்பதே நன்மையாகும். விளக்கம்: தோன்றின் என்பதற்கு, இங்கே இரண்டு வித இடங்கள். ஒன்று கற்றவர்கள் கூடிய அவையில். இரண்டாவது பொது மக்கள் கூடிய கூட்டத்தில். கற்றவர் சபைக்கு மேதைத் தன்மை வேண்டும். செயல் அருமை வேண்டும். மேதகு மேம்பாட்டுத்திறன், மேன்மை மிகு கேண்மையும் வேண்டும். எந்தத் திறனும் இல்லாமல், குறிப்பறிய மாட்டாத மனித மரமாக நிற்பது கேவலம்தானே. ஆக, அந்த அறிவுத் திருவாளர்கள் இருக்குமிடத்திற்குச் செல்லாமல் இருப்பதே நன்மை தருகிற சிறப்பாகும். பொது மக்கள் கூடியிருக்கின்ற இடத்திற்கு, ஆயிரம் பேர்களில் ஆயிரத்து ஒன்றாகச் சென்று நிற்பது - சாதாரணமானவன் செயலாகும். புகழ் எனும் பெருமை பெற வேண்டியவன், புறம் நின்று வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்காதா?