பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 தமிழ் நூல் தொகுப்புக் கலை அன்னவகை வாகீசர் முறையோர் மூன்றும், ஆரூரர் உரைத்திதிரு முறைய தொன்றும், துன்னவகை ஏழாகத் தொகுத்துச் செய்தான் தூயமனு எழுகோடி என்ப துன்னித் தன்னிகரில் திருவருளால் மன்னன் தானும் தாரணியோர் வீடுபெறும் தன்மை சூழ்ந்தே" (24) "மந்திரங்கள் ஏழுகோடி யாதலினால் மன்னுமவர் இந்தவகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்து...” (28) என்பன பாடல் கள். திருமுறை கண்ட புராணத்தில், மூவர் தமிழின் தெய்வ ஆற்றல்களும் கூறப்பட்டுள்ளன. சம்பந்தர் தமிழ், எரியிலே வேகவில்லை - வைகையாற்றில் எதிரேறி வந்தது - அதாவதுமதுரையில் அனல் வாதத்திலும் புனல் வாதத்திலும் வென் றது; திருமயிலாப்பூரில் எலும்பைப் பெண்ணாக்கியது; திரு மருகலில் பாம்பு நஞ்சை நீக்கியது. நாவுக்கரசரின் தமிழ் திங்க ளூரில் நஞ்சை நீக்கியது; கொல்ல வந்த யானையை வணங்கச் செய்தது; கருங்கல்லை மிதக்கச் செய்தது; சுந்தரரின் செந் தமிழ், அவிநாசியில் முதலையுண்ட சிறுவனை வரவழைத்ததுஇவ்வாறு மூவர் தமிழின் ஆற்றல்கள் போற்றப் பெற்றன: 'எரியினிடை வேவாது; ஆற்றெதிரே ஓடும்; என்புக்கும் உயிர்கொடுக்கும்; இடு கஞ் சாற்றும்; கரியை வளைவிக்கும் கல் மிதக்கப் பண்ணும் - கராமதலை கரையிலுறக் காற்றுங்கானே' (17) மூவர் தமிழின் ஆற்றலைப் பரஞ்சோதி முனிவரும் தமது திருவிளையாடல் புராணத்தில் கூறியுள்ளார்: சிவனைப் பரவையாரிடம் தூது விடுத்ததும், முதலை உண்ட சிறுவனை வரவழைத்ததும், எலும்பைப் பெண்ணாக்கி யதும், மறைக்காட்டில் திறக்கப்படாதிருந்த கதவினைத் திறந் ததும் கன்னித் தண்தமிழ் மொழிச் சொற்களா? அல்லது - வேற்று மொழிச் சொற்களா? என்று வினவுவதுபோல் மூவர் தமிழின் முதன்மை ஆற்றலை அறிவித்துள்ளார். பாடல்: "தொண்டர் காதனைத் தூதிடை விடுத்ததும் முதலை உண்ட பாலனை அழைத்ததும், எலும்பு பெண்ணுருவாக்