பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/709

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 687 னந்த சுவாமிகள் பேரால் தொகுத்துள்ளார். பலர் சிறப்புப் பாயிரம் அளித்துள்ளனர். நாள்: 30 - 6-1918, - உள்ளுறை: மூதுரை-நல்வழி நூல்களின் காப்புச் செய்யுட் கள், பெரிய புராண உலகெலாம்' என்னும் பாடல், சில தேவாரப் பாடல்கள், ஒளவையாரின் விநாயகர் அகவல், நக்கீரர் விநாயகர் திருஅகவல், அருணகிரி முத்தி விநாயகர் அகவல், பன்னிரு திருமுறைப் பாடல்கள் சில, பட்டினத்தார் பாடல்கள் சில, திருவருட்பா சில, திருக்குறள்கள் சில, திருவிளையாடல் புராணம் - திருப்புகழ்-திவ்வியப் பிரபந்தம் -கம்பராமாயணம் - ஆகியவற்றிலிருந்து சிற்சில பாடல்கள் திரட்டப்பட்டுள்ளன. - பெரிய வண்ணத் திரட்டு புலவர்கள் பலரால் இயற்றப்பட்ட 21 வண்ண நூல்களின் திரட்டு இது. பார்வை: எஸ். கிருஷ்ணசாமிப் பிள்ளை. வெளியீடு: மதுரை எஸ். பொன்னையா பிள்ளை. திருமங்கலம் புரீகிருஷ்ண விலாச அச்சியந்திர சாலை - 1915, உள்ளுறை : திருப்பூவணம் புஷ்பவனநாதர் வண்ணம், செண்டலங்காரப் பெருமாள் வண்ணம், திரு வொற்றியூர்த் தியாகராசர் வண்ணம், திருவையாற்றுச் செம்பொற் சோதி யார் வண்ணம், திரு வண்ணாமலையார் வண்ணம், சிதம்பரச் சிற்றம்பல வாணர் வண்ணம், மூவரையன் வண்ணம், இராமேச்சுர இராமநாயகர் வண்ணம், சேதுபதி அருமைத்திரிபு வண்ணம், ஆண்கலை வண்ணங்கள் 2, பெண்கலை வண்ணங் கள் 3, பட்டினத்துப் பிள்ளை உடற்கூற்று வண்ணம், திருக் கழுக்குன்றம் வேத்கிரீசர் வண்ணம், திருப்போரூர் ஆண்டவர் வண்ணம், திருப்போரூர்ச் சுழியிலா வண்ணம், மெல்லிசை வண்ணம், வன் மெல்லிசை வண்ணம், தாயுமான சுவாமிகள் வண்ணம் ஆகிய இருபத்தொரு வண்ணங்களின் தொகுப்பா கும். வண்ணம் என்பது ஒரு வகைப் பாடல். திருவதிகைப் பதிகங்கள் தொகுப்பு: ப. பால சுந்தரநயினார், நெல்லிக்குப்பம்.சாது அச்சுக் கூடம், சென்னை - 1940, திருவதிகையைப் பற்றிய