பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம் - 431 அநாகி முறைமையான பழமை என்ற விளக்கம் எழுதப்பட் டிருக்கிறதே. முதல் பகுதி பாயிரம் எனில் இந்த விளக்கம் எழுதப்பட்டிராதே - என்று சிலர் வினவலாம். இந்த விளக்கம் பிற்காலத்தில் எழுதப்பட்டது. எங்கள் பூட்டன் - பாட்டன் காலத்திலிருந்து எங்கள் வீட்டில் உள்ள ஒலைச் சுவடியில், முதல் பகுதிக்கு எந்த விளக்கமும் இல்லை. இது பாயிரம் ஆத வின் விளக்கம் எழுதவில்லை. பிறகு சுவடி பெயர்த்து எழுதி யவர் யாரோ இதற்கும் விளக்கம் எழுதிவிட்டிருக்கிறார். மற்றும், சிவனது அந்ாதி முறைமையான பழமைப் பண்பு முதல் பகுதியில் அவ்வளவாகக் கூறப்படவில்லை; பின்னர் உள்ள பகுதிகளிலேயே கூறப்பட்டுள்ளது. மேலும், சில பதிப்பு களில் தொடக்கத்திலுள்ள - "தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி அல்லலறுத் தானந்த மாக்கியதே - எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவா சகமென்னும் தேன்' என்னும் பாடலில் திருவாசகம்’ என்னும் பெயர் கொடுக்கப் பட்டிருக்கிறதே என்று வினவலாம். இது பிற்காலத்த்ார் ஒருவ ரால் இயற்றப்பட்ட பாடல். ஆசிரியர் எழுதியதில்லை. வாத வூர் எங்கோன்' என ஆசிரியர் படர்க்கையில் கூறப்பட்டிப்பது காண்க. எங்கள் வீட்டு ஒலைச் சுவடியில் இப்பாடலைத் தொடர்ந்து மேலும் இரு பாடல்கள் - அதாவது மொத்தம் மூன்று பாடல்கள் உள்ளன. சிவபுராணம் என்னும் பெயர் திரு வாசகமாக மாறிய திருப்புமைய காலத்துப் பாடல்கள் இவை. வாதவூரர் மாணிக்கவாசகராக ஆனதுபோல், அவரது சிவபுரா ணமும் திருவாசகமாக ஆயிற்று. மாணிக்கவாசகர் என்னும் சிறப்புப் பெயர் ஆசிரியருக்கு ஏற்பட்டதனால், அவரது நூலுக் கும் (திரு) வாசகம் என்னும் சிறப்பு பெயர் சூட்டப்பட்டது. இது காறும் கூறியவற்றால், பல காலத்தில் பல இடங் களில் பல தலைப்புகளில் பாடப்பட்ட பாடல்கள், ஆசிரியர் மாணிக்க வாசகரின் பார்வையிலேயே சிவபுராணம் என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுப் பின்னர்த் திருவாசகம் என்னும் சிறப்புப் பெயர் பெற்றது. திருமூலர் நூலின் திரு மந்திரம்