பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/706

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

684 தமிழ்நூல் தொகுப்புக்கலை மணவாள தாசர் என்ற வேறு பெயரும் உண்டெனப்படுகிறது. உரை : பு.அ. கோவிந்தராச நாயகர். வெளியீடு - தமிழ் நூற்பதிப்புக் கழகம், புரசை, சென்னை. மாறன் அச்சகம், புரசை, சென்னை-1927, உள்ளுறை: திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்து மாலை, திரு வரங்கத் தந்தாதி, சீரங்கநாயகர் ஊசல், சீரங்கநாயகியார் ஊசல், திருவேங்கடமாலை, திருவேங்கடத் தந்தாதி, அழக ரந்தாதி, நூற்றெட்டுத்திருப்பதி யந்தாதி என்பன. இறுதியில் இவ்வாசிரியர் இயற்றிய திருநறையூர் நம்பி மேக விடுதூது என்னும் நூலும் இப்பதிப்பில் உள்ளது. இஃதன்றி, இந்தப் பதிப்பில் எட்டுக்குமேல் ஒன்று உள்ளது. மற்றொரு பதிப்பு 1957 ஆம் ஆண்டு, சென்னை மர்ரே&கம்பெனியார் சென்னை சென்ட்ரல் ஆர்ட் அச்சுக் கூடத்தில் அச்சிட்டு வெளி யிட்ட பதிப்பில், மேகவிடுதூதும் சீரங்கநாயகியார் ஊசலும் இல்லை. இப்பதிப்பில் சரியாக எட்டு நூல்கள் உள்ளன. பதிப் புரை: 15-8 - 1957. மற்றும் ஒரு பதிப்பு M + توبہ ء என்னிடம் உள்ள மக்கிப் பழுத்துப் போன தாளுடன் கூடிய பதிப்பின் முன் பக்கங்கள் இல்லை. இது, மேலே முதலில் கூறியுள்ள 1927 ஆம் ஆண்டுப் பதிப்பாக இருக்கலாம். நூலின் இறுதியில் அரும் பதவுரை இருக்கிறது. மற்றும் ஒரு பதிப்பு அச்சு: கணேச அச்சுக் கூடம், சென்னை. நள ஆண்டு. விலை ரூபா.4 திருவல்லிக்கேணி வை.மு.சடகோப இராமாநுசா சாரியாரும் சே. கிருஷ்ணமா சாரியாரும், வை.மு.கோபால கிருஷ்ணமாசாரியாரும் இயற்றிய விரிவான உரையுடன் இப் பதிப்பு உள்ளது. பல்வகைப் பிரபந்தத் திரட்டு 1923 - இல் வெளியிட்ட ஒளவையாரின் விநாயகர் அகவல் முதலாக, திருமணக் கண்காட்சி ஒடம் ஈறாக உள்ள