பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/719

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 697 மாலை, உலா, பரணி முதலிய பலவகை நூல்கள் உள்ளன. வாண்டையார் பிரபந்தத் திரட்டு கி.வீரைய வாண்டையார் இயற்றிய நூல்களின் தொகுப்பு. இவர் தஞ்சையைச் சார்ந்த பூண்டி மாநகரம் இந்திர குல திலகர் என வழங்கப்பெறுகிறார். இவரது இந்நூலின் முதல் பதிப்பு - 1889. பார்வை: சுப்பிரமணிய ஐயர், தஞ்சை எஸ்.வி. இராம சுவாமி ஐயங்கர்ர் அச்சிட்டது. அச்சகம்: Tanjore “The Patriot Press”. un hwyth gag ustuhl, 1926. நூல்கள்: புஷ்ப வன நாதர் சதகம், புஷ்ப வன நாதர் போற்றிப் பதிகம், புஷ்பவன நாதர் இரட்டை மணிமாலை புஷ்ப வன நாதர் பதிற்றுப்பத் தந்தாதி, புஷ்ப வன நாதர் நவ மணி மாலை, புஷ்ப வன நாயகி மாலை, புஷ்ப வன அகவல். ஆகியவை. கார் வண்ண மாலை (அல்லது) திருவரங்கச் சந்நிதி முறை இது நமச்சிவாய நாவலர் பாடியது.நற்றமிழ் விலாச அச்சி யந்திர சாலை, சென்னை. 1914. நூல்களாவன: கார் வண்ண மாலை, அரங்கப் பத்து, இரங்கல் பத்து, மெய்ஞ்ஞான சோதி மயம், ரகு ராமப் பத்து, கோவிந்தப் பதிகப் பத்து, சிந்தை குடிகொண்ட பத்து, ஆதி சீரங்கப் பத்து, இராமப் பத்து, கருடப் பத்து, போற்றிப் பத்து, குரு விருத்த மாலை, ஆதி மூலப் பத்து, சிந்தையின் பத்து, அஷ்டாச்சரத் திருப்புகழ், அலர் மேலு மங்கைத் தாயார் பதம், நேரிசை வெண்பா, இராமர் பதம் - ஆகியவை. அபிராமி பட்டர் பிரபந்தங்கள் வெளியீடு - குமர குருபரன் சங்கம், ரீவைகுண்டம், தியோடர் பிரஸ், திருச்சி - 1957. நூல்களாவன: கள்ள விநாயகர் பதிகம், அமுத கடேசுவரர் பதிகம், கால சம்மார மூர்த்தி பதிகம், திருக்கடவூர் அபிராமியம்மை இரட் பைப் பதிகம், திருக்கடவூர் அபிராமி அந்தாதி - ஆகியவை. இவை, திருக்கடவூர் அபிராமி பட்டரால் பாடப்பெற்றவை.