பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 தமிழ் நூல் தொகுப்புக் கலை பாட்டு ஆகும். மற்றும், நச்சினார்க்கினியர் செய்யுளியலில் (175) எழுதியுள்ள, 'தலைவியை வற்புறுத்தும் செவிலியர் புனைந்துரைத்து நகுவித்துப் பொழுது போக்குதற்குரியர் என்றவாறு. இக்கருத் தானே சான்றோர். -- செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக் குறியவு நெடியவு முரைபல பயிற்றி இன்னே வருகுவர் இன்றுணை யோரென முகத்தவை மொழியவு மொல்லாள் என்றார் பாட்டினுள். பிற சான்றோரும் செம்முகச் செவிலியர் பொய்ந் நொடி பகர என்றார்.” என்னும் உரைப்பகுதியில் உள்ள பாட்டினுள்" என்பது பத்துப் பாட்டைக் குறிக்கிறது. நச்சினார்க்கினியர் பாட்டு' என்னும் பெயரில் எடுத்துக் காட்டியுள்ள நான்கு அடிகளும் பத்துப்பாட்டுள் ஒன்றாகிய நெடுநல்வாடையில் (153-156) உள்ளனவாகும். இவ்வாறாகச் சான்றோர் ஆட்சியில்,பத்து நூல் களின் தொகைப் பெயராகத் - திரட்டுப் பெயராகப் பாட்டு’ என்பது பயன்படுத்தப் பட்டுள்ளது. ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்” என்ற முறையில், பன்னிரு பாட்டியல் என்னும் நூலில் பத்துப் பாட்டுக்குப் பின்வருமாறு இலக்கணம் கூறப்பட்டுள்ளது: "நூறடிச் சிறுமை நூறுபத் தளவே ஏறிய அடியின் ஈரைம் பாட்டுத் தொடுப்பது பத்துப் பாட்டெனப் படுமே’. அதுவே, அகவலின் வருமென அறைகுநர் புலவர்' பத்துப் பாட்டின் பாடல்கள் நூறு அடிக்குக் குறையா மலும், ஆயிரம் அடிக்கு மிகாமலும், பெரும்பாலும் ஆசிரியப் பாவால் வரும் - என்பது கருத்து. இந்தப் பத்துப் பாட்டுக்களும் இன்னின்னவை என்பதை, 'முருகு பொருங்ாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி-மருவினிய