பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை jo () 339. உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு பொருள் விளக்கம்: சாக்காடு போலும் செத்துக்கிடப்பதுபோல உறங்குவது உறங்க வேண்டும் உறங்கி - ஆழ்ந்து தூங்கி விழிப்பது = கண்திறப்பது போல பிறப்புபோலும் - சிறந்த துவக்கமாக அமையும். சொல் விளக்கம்: சாக்காடு - சாவு, சாதல்; பிறப்பு - நல்ல தொடக்கம் முற்கால உரை: ஒருவனுக்கு சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும். அதன்பின் பிறப்பு வருதல், உறங்கி விழித்தலோடு ஒக்கும். தற்கால உரை: ஒருவனுக்கு இறப்பு என்பது மீளா உறக்கம் கொள்வது போன்றதாகும். பிறப்பு என்பது அவன் தூங்கி எழும்போது ஏற்படும் விழிப்புப் போன்றதாகும். புதிய உரை: செத்துக் கிடப்பதுபோல ஆழ்ந்து உறங்குங்கள். அவ்வாறு உறங்கி வி ழிக்கும் போது, உடம்பில் ஏற்படும் புத்துணர்ச்சியே அந்த நாளின் சிறந்த தொடக்கமாக அமைந்து விடும். விளக்கம்: உடலுக்கு களைப் பும், இளைப்பும், அயர்வும், உலைவும் எல்லாம் எழுவதும். உடலை உழுவதும் இயற்கையாக நடப்பனவாகும். இவற்றை எல்லாம் நாம் கண்டு கொள்ளாமல் இருந்தால், உடம்புக்கு நோய் வரும். நோவு வரும். சாவும் வரும். ஏனென்றால், உடம்பிலே சத்துக் குறைகிற போதுதான். செத்துப் போகிற நிலமை ஏற்பட்டு விடுகிறது. அதனால்தான், எட்டுமணி நேர உறக்கம் வேண்டும் என்று இப்பொழுதும் சொல்கிறார்கள். ஆழ்ந்து தூங்குவதைத்தான் ஆங்கிலத்தில் (Deep sleep Dead Sleep) என்கிறார்கள். டெட் ஸ்லீப்பைத்தான் வள்ளுவர் சாக்காட்டு உறக்கம் என்கிறார். அவ்வாறு ஆழ்ந்து உறங்கி விழிக்கும் பொழுது, தசைகள் (losh) எல்லாம் புத்துணர்ச்சி (Fresh) பெறுகின்றன.