பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 தமிழ் நூல் தொகுப்புக் கலை படலத்தில் தொல்காப்பியர்க்குப் பங்கு இருக்க முடியாதுஎன்பது அந்த மறுப்பு. தொல்காப்பியக் காஞ்சித் திணைக்கும் பன்னிரு படலக் காஞ்சித் திணைக்கும் வேறுபாடு இருக்கலாம். ஆனால், தொல் காப்பியர் பன்னிரு படலத்தில் இயற்றியிருப்பது காஞ்சிப் படலம் அல்லவே - வெட்சிப் படலம் என்றல்லவா சொல்லப் படுகிறது! நிற்க, - காஞ்சி என்பதற்கு நிலையாமை என்னும் பொருள் மட்டும் இல்லை; இன்னும் பல பொருள்கள் உண்டு என்பது நினைவிலிருக்க வேண்டும். நாடு பிடிக்க வந்தவனை எதிர்த்தல் காஞ்சி என்று கூறிய பன்னிரு படலம், காஞ்சி என்பதற்கு நிலையாமை என்னும் பொருளும் உண்டு என்பதை அறியாமல் இல்லை. பன்னிரு படல நூலின் பொதுவியல் படலத்தில், காஞ்சி என்னும் பெயரால் நிலையாமையை உணர்த்தும் துறைகள் உள்ளன. இதனை, நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி உரையில் எழுதியுள்ள, 'வஞ்சியும் காஞ்சியும் தம்முள் மாறே எனப் பன்னிரு படலத்திற் கூறிய திணைப் பெயர் இப்பாட்டிற்குப் பொரு ளன்மை யுணர்க. அவர் (பன்னிரு படல ஆசிரியர்) முது மொழிக் காஞ்சி முதலியவற்றைப் பொதுவியல் என்று ஒரு படலமாக்கிக் கூறலின், அவை திணைப்பெயராகாமை உணர்க." என்னும் பகுதியால் அறியலாம். மற்றும், தெரிந்ததைக் கொண்டு தெரியாததற்குச் செல்லுதல் என்னும் உளவியல் முறைப்படி, பன்னிரு படலத்தின் வழி நூலாகிய புறப்பொருள் வெண்பா மாலையாலும் இதனை அறியலாம். புறப்பொருள் வெண்பா மாலையில் காஞ்சிப் படலம் என ஒரு படலம் தனியே இருப்பதல்லாமல், பொதுவியல் படலம் என ஒன்றும் உள்ளது. இந்தப் பொதுவியல் படலத்தில், காஞ்சிப் பொது வியல் என ஒரு பிரிவு தனியே உள்ளது. இந்தக் காஞ்சிப் பொதுவியல் நிலையாமையை உணர்த்துகிறது. இதுபற்றிய நூற்பா வருமாறு: 'மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி பெருங்காஞ் சிய்யே பொருள்மொழிக் காஞ்சி