பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐங்குறுநூறு 279 பற்றிப் பாடப்பெற்ற நூறுடாக்களைக் கொண்டதாகும். இந்த ஐந்து நூல்களும் எப்படி உருவாயின? கூடலூர் கிழார்க்கு எவ்வாறு கிடைத்தன? சொல்லி வைத்தாற்போல்-அச்சில் வார்த்தற்போல், ஐந் திணைகளையும் பற்றி ஆளுக்கு நூறு பாடல்கள் வீதம், முன் கூட்டியே ஒருவர்க்கொருவர் பேசி வைத்துக்கொண்டு எழுதி னார்களா? நீ இந்தத் திணைபற்றி - அவர் அந்தத் திணை - நான் இந்தத் திணை பற்றி-என்று ஒருவர்க்கொருவர் பங்கு போட்டு எழுதினார்களா? அதிலும் ஒவ்வொரு திணைபற்றியும் நூறு ஆசிரியப் பாடல்கள் மட்டுமே எழுதுவது என்பது திட்டமா? மற்றும், பாடல்கள் மூன்று அடிக்குக் குறையாமலும் ஆறடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்பது ஏற்பாடா? இவ்வளவு பொருத்தங்களும் இயற்கையாய் அமைந்தனவா? செயற்கையாய் அமைக்கப்பட்டனவா? இவ்வளவு பொருத்தங் களும் அமைய ஐந்து நூல்கள் கிடைத்ததால் கூடலூர் கிழார் அவற்றைத் தொகுத்து ஒரு நூலாக உருவாக்கினாரா? ஒருவேளை, இப்படியிருக்குமா? பிற்காலத்தில் ஒவ்வொரு புலவரும் கலம்பகம் நூறு பாடல், அந்தாதி நூறு பாடல், பிள்ளைத் தமிழ் நூறு பாடல் என்று - ஏராளமாகப் பாடித் தள்ளியது போலவே, முற்காலத்தில்-சங்க காலத்தில், புலவர் 'லர் ஒவ்வொரு திணை பற்றியும் நூறு நூறு பாடல்கள் வீதம் பாடித் தள்ளினார்களா? இவ்வாறு, ஒவ்வொரு திணை பற்றி யும் நூறு பாடல்கள் கொண்ட நூல்கள் பல இருக்க, அவற்றுள் மிகச் சிறந்தனவாக-திணைக்கு ஒன்று வீதம் ஐந்து நூல்களைத் தேர்ந்தெடுத்து, ஐங்குறு நூறு என்னும் பெயரில் கூடலூர் கிழார் தொகுத்தளித்தாரா? n ஐங்குறுநூறு இப்படியிப்படி உருவாகியிருக்கலாம் என்று மேலே இரண்டு முறைகள் கற்பனை செய்து காட்டப்பட்டன. அவற்றுள் ஏதேனும் ஒன்றை நம்பத் தோன்றினும், இன்னும் வேறுமுறையிலும் இந்நூல் உருவாகியிருக்கலாம்! ஐங்குறுநூறு போலவே ஐந்து அகப்பொருள் திணைகளைப் பற்றிப் பேசும் ஆசிரியப்பாவால் ஆன நெடுந்தொகை, குறுந் தொகை, நற்றிணை என்னும் மூன்று தொகை நூல்களின்