பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/679

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 657 இசைக் கோவை (தமிழ்ச் செய்யுள் திரட்டு) முதல் பதிப்பு 1886 அடிசன் அன்ட் கம்பெனி, அடிசன் பிரஸ், சென்னை. கிறித்தவப் பிள்ளைகட்கான ஞானப் பாடல் களின் தொகுப்பு. ஆ - கரந்தைக் கவியரசு ஆர். வேங்கடாசலம் பிள்ளை. கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடு. தமிழ் மொழி பற்றிய பாடல் களின் தொகுப்பு. சாசனச் செய்யுள் மஞ்சரி வெ-மயிலை சீனி வேங்கடசாமி. வி.உ-பாரி நிலையம், சென்னை. 1959. உ-எண்பதுக்கு மேற்பட்ட சாசனங்களிலிருந்து (கல்வெட்டுகளிலிருந்து) பாடல்கள் திரட்டப்பட்டு வெளியிடப் பட்டது. இது. செம்பிலும் தாமிரத்திலும் வெட்டப்படுவதும் உண்டு. வாசிட்டத் திரட்டு ஆ-அ. இராம சுவாமிகள். pவரட்சா அச்சுக் கூடம், சென்னை. 1886, உ - வாசிட்டம் 43 அத்தியாயங்களிலிருந்து 676 பாடல்கள் எடுக்கப்பட்டுள்ளன. மெய்ஞ் ஞானத் திருப்பாடல் திரட்டு ஆ-பீர் முகமது சாகிபு. இவர் தென்காசியில் பிறந்து தற்கலையில் வாழ்ந்தவர். கலா ரத்நாகர அச்சுக் கூடம், சென்னை 1898. மெய்ஞ்ஞானப் பாக்கள் 28 பகுதிகளாக அமைந்துள்ளன. மொத்தப் பாக்கள் 935. தோத்திரப் பிரபந்தத் திரட்டு' பார்வை-கு. அப்பன் செட்டியார். ஆமகள் விலாச அச்சுக் கூடம், சென்னை. 1936. இது, 93 சைவ நூல்களிலிருந்து எடுக் கப்பட்ட பாடல்களின் திரட்டு. சிறு - கட்டையான நூல். 968 பக்கம் கொண்டது.