பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்காலம் - 549 3. சிற்றிலக்கண நூல் திரட்டு - தொ-வெ-சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பார்வை-கொ. இராம்லிங்கத்தம்பிரான். அப்பர் அச்சகம், சென்னை. 1967, இந்தத் திரட்டில் அடங்கியுள்ள சிறு சிறு இலக் கண நூல்களாவன:- - - 1. திருத் தணிகை விசாகப் பெருமாள் ஐயர் இயற்றிய யாப்பிலக்கணம். குமரகுருபரர் அருளிய சிதம்பரச் செய்யுட்கோவை. குணவீர பண்டிதர் இயற்றிய நேமிநாதம் - உரையுடன். 4. வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும் வரையறுத்த பாட்டியலும் - கொ. இராமலிங்கத் தம்பிரா னின் விளக்க உரையுடன். 5. பன்னிருபாட்டியல் - கா.ர.கோவிந்தராசு முதலியாரின் - விளக்க உரையுடன். - 6. திருத் தணிகை விசாகப் பெருமாள் ஐயர் இயற்றிய அணி யிலக்கணம். - சிற்றிலக்கண நூல்கள் பற்றி ஆராய்ச்சி செய்பவர்க்கு இத் திரட்டு ஒரே நேரத்தில் உதவி புரியும். ஒன்றினம் முடித்தல்-தன்னினம் முடித்தல் என்றபடி, இலக் கியம் கண்ட இலக்கணத் தொகுப்புகளும் இந்நூலில் சேர்க்கப் பட்டன. இலக்கண நூல் திரட்டு பஞ்ச லக்கண மூலமும் நேமி நாதமும் வீர சோழியமும்தொ.அ.இராமசுவாமி.சீவரட்சாமிர்த அச்சுக் கூடம், சென்னை. விசய - ஆணி. உள்ளுறை:- நன்னூல், அகப்பொருள் விளக்கம், புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலக் காரிகை,தண்டி யலங்காரம், நேமி நாதம், வீர சோழியம்-இந்நூல்களின் நூற் பாக்களின் தொகுப்பு. தஞ்சை சரசுவதி மகாவில் உள்ளது.