பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/591

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றாண்டு 569 உள்ளுறை: 1.கடல் மேற் குமிழிகள், 2. அமிழ்து எது?, 3.அகத்தியன் விட்ட புதுக்கரடி, 4.நல்லமுத்துக் கதை, 5.ஏற்றப் பாட்டு, 6.திராவிடர் திருப்பாடல், 7.சமத்துவப் பாட்டு 8.புரட்சித் திருமணத் திட்டம், தேனருவி இசைப் பாடல்களின் தொகுப்பு இது. வெளியீடு: பாரதி தாசன் பதிப்பகம், புதுச்சேரி, அச்சு: பாரதி பிரின்டர் சென்னை. ஆண்டு: ஏப்ரல், 1956. பொருள் அடக்கம்: 1.தமிழ், 2.தமிழர்க்கு, 3. காதல், 4. துயருற்ற மகளிர், 5.துறைப் பாடல்கள், 6. இயற்கை எழில், 7.உயர்ந்தோர், 8.பல்வகை - இவை பெரிய தலைப்புகள். பல உள்தலைப்புகளும் உண்டு. 'தன்னேரிலாத தமிழ் முதல் அன்பு வாழ்வு கொண்ட நீவிர் வரை மொத்தம் 77 பாடல் கள் உள்ளன. - இந்நூலில் - ஆசிரியர் முன்னுரையில், "......அவ்வப்போது தோன்றிய பாடல்களின் தொகுப்பே தேனருவி'......அகம் - புறம் பற்றிய பழந்தமிழ்ச் செய்யுட்களின் உரையாக அமைந்த பாட்டுக்கள் பல இதில் காணப்படும்...” என்று அறிவிக்கப்பட் டுள்ளது. இளைஞர் இலக்கியம் வெளியீடு: பாரி நிலையம், சென்னை. முதல் பதிப்பு 1958. மூன்றாம் பகுதி: பிப்ரவரி, 1964. மாருதி பிரஸ், சென்னை-14, - ஐந்து வயது இளைஞர் முதல் பல்கலைக் கழக மாணாக் கர் வரை உள்ள இளைஞர் பாடல்களின் தொகுப்பு இது. தலைப்புகள்; தமிழ், இயற்கை, அறிவு, ஊர்தி,தொழில், உயிர் கள், தாலாட்டும் துயிலெழுப்பும், சிரிப்பு, சிறுகதைப் பாட்டு ஆகிய, ஒன்பது தலைப்புகள் உள்ளன. பல உள் தலைப்புகளும் உண்டு. - முல்லைக் காடு வெளியீடு: கலை மன்றம், சென்னை - பூரீமகள் அச்சகம், சென்னை. மூன்றாம் பதிப்பு: 1955.