பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I46 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - - 102. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. பொருள் விளக்கம்: காலத்தின் = தேவைப்படுகிற சரியான சமயத்தில் ஆல்செய்த - இர்க்கப்பட்டு அதிசயமாய்ப் புரிந்த நன்றி = நன்மை சான்ற உதவியானது சிறிதெனினும் = அளவில் சிறியதாக அமைந்தாலும் ஞாலத்தின் = உயர்ந்தோரின் மாண = மாண்புமிகு பெருமைகளை விட பெரிது - பேரளவு உடையதாகும். சொல் விளக்கம்: காலம் = தக்க சமயம், ஆல் = அதிசயம், இரக்கம் ஞாலம் = உயர்ந்தோர், உலகம்; மானம் = மாட்சிமை, மாண்பு முற்கால உரை: ஒருவன் காலத்திற் செய்த உதவி சிறிதாயினும் அது உலகினும் பெரிது என்பதாம். தற்கால உரை: பருவமல்லாத காலத்தில் உதவி செய்யாத உலகத்தைவிட, காலமல்லாத காலத்திலும் உதவி செய்கிறவன்தான் பெருமையில் மிக்கவனாவான். புதிய உரை: தேவைப்படுகிற சரியான சமயத்தில் செய்யப்படுகிற இரக்கம் மிகுந்த அதிசயிக்கத்தக்க உதவியானது, சிறியது என்றாலும், அது உயர்ந்தோரின் உள்ளத்தை விடப் பெருமைகளைவிட, பெருமை மிக்கதாகும். விளக்கம்: உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு, உயர்ந்தோரால்தான் உலகம் நிலைத்திருக்கிறது. உயர்ந்தோரின் உள்ளம்தான் உலகைவிடப் பெரியதாகும். உண்மையில் அரியதாகும். அந்த உள்ளத்திற்கும் மேலான பெருமையை விட, தருணத்தில் செய்கிற சிறு உதவி பெருமை படைத்து விடுகிறது என்பதை இரண்டாவது குறளில் தெளிவுபடுத்துகிறார் திருவள்ளுவர். ---