பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை ós.3 சொல் விளக்கம்: நீப்பு - துறவு, பற்றற்ற நிலை: உம் - அக்கப் பொருள் தன்னுயிர் = தன் ஆன்மா, பிறிதுதான் பிறஆன்மா இன்னுயிர் - பெருமை மிகுந்த ஜீவன் முற்கால உரை: அது செய்யாவழி தன்னுயிர் உடம்பின் நீங்கிப் போகுமாயினும், தான் பிறிதோர் இன்னுயிரை, அதன் உடம்பின் நீக்கும் தொழிலைச் செய்யற்க. தற்கால உரை: ஒருவனின் உயிர்போகக் கூடியதாக இருந்தாலும், அந்நிலை பிற உயிர்களுக்கு ஏற்படாமல் இருப்பதற்கு வேண்டி, அவன் வேறோர் உயிரைப் போக்கும் ஒரு செயலை ஒருபோதும் செய்யக்கூடாது புதிய உரை: பற்றற்றதுறவு நிலையில், ஆக்கமெல்லாம் தன் ஆன்மாவுக்குக் கிடைப்பதாக இருந்தாலும், பிற ஆன்மாக்களின் பெருமைக்குரிய է, ஜீவன்களைப் பிரிக்கும் செயலைச் செய்யற்க. விளக்கம்: துறவு என்பது இயல்பாக நடந்து விடுவது இல்லை. சுற்றி வருகின்ற உறவு. வீழ்த்திக் கலக்குகின்ற சரிவு. பற்றிக் கொதிக்கின்ற பிரிவு. பாசப் போராட்டத்தின் விரிவு. இப்படி எல்லாம் பல பெருங்கடல்களைக் கடந்துதான் துறவு காலூன்ற வேண்டி இருக்கிறது. அத்தகைய துறவுக்குள் கால் பதிக்கிற ஆன்மாக்கள் பெறுகிற ஆனந்த சுகமும், அனந்த கோடி களிப்பினைப் பெறும் மனமும், ஒருவனை எப்படி எல்லாம் மயக்கி, பிதற்றும். உட்காரச் செய்யும். அந்த மயக்கத்தைப் பெற்றவர்கள், தன்னிலை பிறழ்ந்து தாறுமாறாக நடப்பார்கள். தறிகெட்டுத் திரிவார்கள். தீமைகளையும், பொல் * - - - - .. H. லின்சிச் செய்வார்கள் பொலலாங்குகளையும, தலைககு மஞ்சச செயவாாகள. ஆகவே, ஆன்ம சுதத்திற்காக அடுத்த உயிர்களை வதைக்காதே, அழிக்காதே என்று துறவின் சீர்மையை இந்த ஏழாவது குறளில் கோடிட்டுக் காட்டுகிறார்.