பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 தமிழ் நூல் தொகுப்புக் கலை கூறும் புறச்செய்யுட்கள் உதாரணம் என்றவாறு'- என்னும் உரைப் பகுதியால் அறியலாம். 'புறநானூறு' என்னும் நூற் பெயர், வேறு வடிவங்களிலும் வழங்கப்பெறும் என்பதை அறிவிக்கவே இவ்வளவு கூறப்பட்டது. புறநானூறு இனிப் புறநானூறு' என்னும் பெயர் வழக்காற்றுற்கும் சான்று காட்ட வேண்டுமல்லவா? தொல்காப்பியம் - புறத் திணையியலில், தானை யானை குதிரை யென்ற என்று தொடங்கும் (17 - ஆம்) நூற்பாவின் கீழ் நச்சினார்க்கினியர் வரைந்துள்ள, "இவை தனித்து வராது தொடர்நிலைச் செய்யுட்கண் வரும், அவை தகடூர் யாத்திரையினும் பாரதத்தினுங் காண்க புறநானூற்றுள் தனித்து வருவனவுங் கொள்க.”- என்னும் உரைப்பகுதியிலும், அதே இயலில், கொடுப்பார் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும், என்று தொடங்கும் (35 - ஆறு) நூற்பாவின் கீழ் அவர் வரைந்துள்ள, 'தத்தம் புதுநூல் வழிகளால் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும், அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகை களுக்கு நூலாகலின், அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூறவேண்டு மென்றுணர்க" என்னும் உரைப்பகுதியிலும், புறநானூறு' என்னும் பெயர் வழக்காறு உள்ளமை காண்க. நூல் தொகுப்பும் அமைப்பும் புறநானூற்றைத் தொகுத்தவர் பெயரோ தொகுப்பித் தவர் பெயரோ தெரியவில்லை. மற்றும், இதற்கு அடியளவும் இல்லை. எத்தனை அடிகள் கெர்ண்டதாகவும் இருக்கலாம். அகத்திணைப் பாடல்கள் ஆயிரத்திருநூறு கிடைத்ததால், அவற்றை நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை என மூன்று தொகை நூல்களாக ஆக்குவதற்காக அம் மூன்று நூற் பாடல்களுக்கும் அடியளவு வரையறுக்க வேண்டிய தாயிற்று. ஆனால், புறத்திணைப் பாடல்கள் நானூறு